வியாழனின் பனிக்கட்டி நிலவான யூரோப்பாவை ஆராய்ந்து, வாழ்வின் அறிகுறிகளைத் தேடும் நாசா திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது. நாசா யூரோபா கிளிப்பர் மிஷனில் பொதுமக்கள் தங்கள் பெயர்களை அனுப்பி வைக்கலாம். உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனுப்பத் தொடங்கி உள்ளனர். “மெசேஜ் இன் எ பாட்டில்” என்ற பிரச்சாரத்தில் பயனர்களின் பெயர்கள் மைக்ரோசிப்பில் பதிக்கப்பட்டு விண்கலத்தில் அனுப்பபடும்.
நூறாயிரக்கணக்கான பெயர்கள் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்திய நேரப்படி, ஜனவரி 1, 2024 அன்று காலை 10.29 மணிக்குள் பெயர்களை அனுப்பி வைக்க வேண்டும். அதன் பிறகு, தெற்கு கலிபோர்னியாவில் உள்ள ஏஜென்சியின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தில் உள்ள தொழில்நுட்ப வல்லுநர்கள் எலக்ட்ரான் பீம் பயன்படுத்தி நாணய அளவிலான மைக்ரோசிப்பில் பெயரை ஸ்டென்சில் செய்வார்கள். உரையின் ஒவ்வொரு வரியும் சுமார் 75 நானோமீட்டர்கள் அல்லது மனித முடியின் அகலத்தில் 1/1000 வது அளவு இருக்கும்.
அதன் பிறகு, அமெரிக்கக் கவிஞர் அடா லிமோன் எழுதிய "இன் ப்ரைஸ் ஆஃப் மிஸ்டரி" என்ற கவிதை வரி பொறிக்கப்பட்ட மெட்டல் தகட்டில் சிப் இணைக்கப்படும். விண்கலம் யூரோப்பாவில் ஏறக்குறைய 50 முறை பறக்கும் போது விண்கலத்தின் வெளிப்புறத்தில் கவிதை மற்றும் பெயர்கள் “மெசேஜ் இன் எ பாட்டில்” போன்று இருக்கும்.
europa.nasa.gov/message-in-a-bottle/sign-on/ என்ற இணைய பக்கத்தில் உங்கள் பெயரை அனுப்ப நீங்கள் பதிவு செய்யலாம். பதிவு செய்ய பின் எலக்ரானிக் வடிவ நினைவு பரிசை டவுன்லோடு செய்யலாம். எப்படி வியாழன் நிலவுக்கு அனுப்பபடுமோ அது போன்ற எலக்ரானிக் வடிவ நினைவு பரிசை உங்கள் பெயருடன் பெற்றுக் கொள்ளலாம்.
வியாழனின் கலிலியன் சந்திரன் யூரோபா அதன் பனிக்கட்டி ஓடுக்கு அடியில் திரவ நீரின் பெரிய பெருங்கடலைக் கொண்டுள்ளது. நீர் நிலவின் பாறை மையத்துடன் தொடர்பு கொண்டுள்ளது, இது விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, சுவாரஸ்யமான இரசாயன எதிர்வினைகளை சாத்தியமாக்குகிறது என்று கூறினர்.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/technology/science/jupiter-moon-europa-clipper-nasa-9083407/
1,940 மைல் அகலமுள்ள (3,120 கிலோமீட்டர்கள்) நிலவு சூரிய குடும்பத்தில் வேற்றுகிரகவாசிகளை ஆய்வு செய்வதற்கான போட்டியில் இதை சிறந்த ஒன்றாக வானியலாளர்கள் கருதுகின்றனர்.
யூரோபா கிளிப்பர் பணியானது வியாழனின் நிலவான யூரோபாவை ஆழமாக ஆராய்ந்து, பனிக்கட்டி நிலவு உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலைகளைக் கொண்டிருக்குமா மற்றும் வானியற்பியல் பற்றிய நமது நுண்ணறிவை அதிகரிக்குமா என்பதை ஆராயும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“