பிரதமர் நரேந்திர மோடியின் செயலி மூலம், பொதுமக்களின் அந்தரங்க தகவல்கள் திருடப்படுவதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
சமீபத்தில் ஃபேஸ்புக் நிறுவனத்தினால் ஏற்பட்ட குழப்பம் மோடியின் ஆப் வரை சென்றுள்ளது. அமெரிக்காவில் நடைப்பெற்ற அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக 50 மில்லியன் அமெரிக்க மக்களின் தகவல்களை ஃபேஸ்புக் நிறுவனம், லண்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்னும் நிறுவனத்திற்கு வழங்கியதாக பகீரங்கமான குற்றச்சாட்டு வெடித்தது.
இந்த குற்றச்சாட்டை ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் உண்மை என்று அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டார். மேலும், இதுப்போன்ற தவறு நடந்ததிற்கு பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்தார். மார்க்கின் இந்த அறிவிப்பும், யூசர்களின் தகவல்கள் வெளியானது என்ற செய்தியும் பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதன் பின்பு, பல்வேறு தரப்பில் இருந்தும் மார்கிற்கு எதிர்ப்புகள் கிளம்பின. அமெரிக்காவில் நடைப்பெற்றது போல் இந்திய தேர்தலில் நடந்தாலோ அல்லது இந்திய மக்களின் தகவல்கள் வெளியானாலோ மார்க் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய ஐடி அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் எச்சரித்தார்.
இந்த பரபரப்பே இன்னும் ஓயாத நிலையில், தற்போது மீண்டும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள ஆன்ராய்ட் செயலி மூலம் பொதுமக்களின் அந்தரங்க தகவல்கள் திருடப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தான் அது.
மோடிக்கு, குறுந்தகவல் மற்றும் இ-மெயில் அனுப்பவும், உடனடி தகவல் பெறவும் வசதியாக, ‘மொபைல் போன் ஆப்’ என்ற, ‘நரேந்திர மோடி மொபைல் செயலி’ என்ற சேவையை தொடங்கப்பட்டது. இந்த ஆப்பை பொதுமக்கள் ப்ளே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்துக் கொள்ளலாம்.
இதைப் பயன்படுத்தி நேரடியாக பிரதமர் அலுவலகத்திலிருந்து தகவல்கள் பெற முடியும் என்றும் பல்வேறு நலத்திட்டங்களுக்கு இந்த செயலில் பெரிதளவில் உதவும் என்று பிஜேபி அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்த ஆப் மூலம் மக்களிடன் அந்தரங்க தகவல்கள் திருடப்பட்டு சுய லாபத்திற்கு பயன்படுத்தப்படுவதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
When you create a profile in the official @narendramodi #Android app, all your device info (OS, network type, Carrier …) and personal data (email, photo, gender, name, …) are send without your consent to a third-party domain called https://t.co/N3zA3QeNZO. pic.twitter.com/Vey3OP6hcf
— Elliot Alderson (@fs0c131y) March 23, 2018
இந்த செயலியை பயன்படுத்தும் மக்கள் உடனடியாக அதை டெலிட் செய்து விடும் படி, சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. மேலும், மென்பொறியாளர் ஒரு இந்த செயலியை ஹேக்(hack) செய்துவிட்டதால் தான் இதுப்போன்ற தகவல்கள் பரவி வருவதாகவும் கூறப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இந்த தகவலை பிஜேபி அரசு முற்றிலுமாக மறுத்துள்ளது. இது எதிர்க்கட்சியினரால் பரப்பட்ட பொய் வதந்தி எனவும் விளக்கம் அளித்துள்ளது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook
Web Title:Narendra modi android app sharing personal info users without consent researcher
Tamil news today live : திமுக தேர்தல் வாக்குறுதிகள் ..மு.க.ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார்!
1 மாசம் ஆனாலும் கெட்டு போகாது… வாசனையான பூண்டு பருப்பு பொடி!
ஸ்டாலின் கையில் முருகன் வேல் : பிரபலங்களின் கருத்துக்கள் என்ன?
சிவகார்த்திகேயன் பட நடிகைக்கு திடீர் திருமணம் : கப்பலில் பணியாற்றும் மாப்பிள்ளை
கடும் கட்டுப்பாடுகளுடன் 44-வது புத்தக கண்காட்சி : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு