சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியிருக்கும் நாசாவின் இரண்டு விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் பூமி திரும்புவதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக நாசா செவ்வாயன்று அறிவித்தது.
வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஜூன் 5 அன்று போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் முதல் முறை சோதனை பயணமாக சென்றனர். இதன் பின் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அங்கே சிக்கி உள்ளனர். 8 நாட்கள் திட்டமிடப்பட்ட பணி 8 மாதங்கள் ஆகி உள்ளது.
விண்வெளி வீரர் இருவரையும் மீண்டும் கொண்டு வருவதற்காக ஸ்பேஸ்எக்ஸின் க்ரூ-10 டிராகன் காப்ஸ்யூலை பிப்ரவரி 2025 இல் அனுப்பி கொண்டு வர திட்டமிடப்பட்டது.
இருப்பினும், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் உள்ளிட்ட க்ரூ -9 ஐ விடுவிக்க அமைக்கப்பட்டுள்ள க்ரூ -10 மார்ச் 2025 க்கு முன்னதாக ஏவப்படாது என்று நாசா செவ்வாயன்று அறிவித்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“