நாசா புதிய விண்வெளி வீரர்களை தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்களை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் நாசாவின் லட்சிய திட்டங்களில் நிலவு, செவ்வாய் கிரக திட்டத்தில் கூட பங்கேற்கலாம். ஏப்ரல் 2-ம் தேதி இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதியாகும். நாசாவில் சேர கல்வித் தகுதி, பயிற்சி உள்ளிட்டவை குறித்து இங்கு பார்ப்போம்.
மருத்துவ சோதனைகள்
1. மருத்துவ சோதனை
2. உங்களைப் பற்றிய பின்னணி விசாரணை
3. உடற்தகுதி சோதனை - தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஏஜென்சி நடத்தும் உடல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்
4. மருத்துவ மற்றும் மனநல பரிசோதனை
விண்வெளி வீரராக கல்வித் தகுதி
1. அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் பொறியியல், உயிரியல் அறிவியல், இயற்பியல், கணினி அறிவியல் அல்லது கணிதம் ஆகியவற்றில் முதுகலைப் பட்டம், பிஎச்.டி. அல்லது வெளிநாட்டு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. தேசிய அல்லது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சோதனை பைலட் பள்ளி திட்டத்தில் சேர வேண்டும். ஜூன் 2025-க்குள் பயிற்சி முடிக்கப்படும்,
3. அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்கள் கல்வித் துறைகளில் பட்டப்படிப்பை முடித்த பிறகு மூன்று வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்வெளி வீரர் பயிற்சி
ஒரு தீவிர பின்னணி சோதனைக்குப் பிறகு, விண்வெளி வீரர்கள் இரண்டு ஆண்டுகள் நீடிக்கும் பயிற்சிக்கு உட்படுத்தப்படுகிறார்கள். வீரர்கள் தேர்வு செய்யப்பபட்டதும் பயிற்சியின் முதல் மாதத்திற்குள் நீச்சல் தேர்வை எடுக்க வேண்டும்.
"விண்வெளி வீரராக இருப்பதற்கு தேவையான அடிப்படை திறன்கள் - விண்வெளி நடைப்பயணம் மற்றும் ரோபாட்டிக்ஸ் முதல் தலைமைத்துவம் மற்றும் குழுப்பணி திறன்கள் வரை விண்வெளி வீரர்கள் தோராயமாக இரண்டு ஆண்டுகள் பயிற்சி பெறுவார்கள்" என்று விண்ணப்பம் கூறுகிறது.
பயிற்சி அமர்வுகளில் விண்வெளி வீரர்கள் அதிக அளவில் பயணம் செய்ய வேண்டும். அவர்கள் வேலைக்கு 76% அல்லது அதற்கு மேல் பயணம் செய்ய எதிர்பார்க்கலாம் என்று விண்ணப்பம் கூறுகிறது.
அவர்கள் தங்கள் பயிற்சியை முடித்ததும், விண்வெளி வீரர் குழுவில் சேர்ந்து, விண்வெளிப் பயணப் பணிகளுக்கு ஒதுக்கப்படுவதற்குத் தகுதி பெறுவார்கள். அதன் பின் அடுத்தடுத்த பணிகள் வழங்கப்படும் என்று நாசா கூறியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“