நாசா விண்வெளி வீரர் மேத்யூ டொமினிக், டிராகன் எண்டெவர் விண்கலத்தில் இருந்து சிவப்பு மற்றும் பச்சை நிறங்களில் தோன்றிய அரோரா நிகழ்வை அற்புதமாக படம் எடுத்துள்ளார். டைம்லாப்ஸில் வைத்து இந்நிகழ்வை வீடியோ எடுத்து அவர் வெளியிட்டுள்ளார். அக்டோபர் 8 அன்று அவர் இதைப் பகிந்துள்ளார்.
இந்த வீடியோ 200,000க்கும் அதிகமான பார்வையாளர்களுடன் வைரலாகியுள்ளது. மேலும், டொமினிக் இந்தப் படத்தை எடுக்கப் பயன்படுத்திய கேமரா செட்டிங்ஸையும் பகிர்ந்துள்ளார். அதில், “0.8s exposure, 14mm, ISO 3200, 1.6s interval, 30fps.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“