NASA astronaut Christina Koch returns to Earth : நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சியாளரான க்றிஸ்டினா கோச் விண்வெளியில் 11 மாதங்கள் தங்கி புதிய சாதனை. விண்வெளியில் அதிக நாட்கள் தங்கிய வீராங்கணை என்ற புதிய சாதனையுடன் கஜகஸ்தானில் பத்திரமாக தரையிரங்கினார் க்றிஸ்டினா.
Advertisment
ரவி வர்மா ஓவியங்களுக்கு உயிர் கொடுத்த 11 நடிகைகளும் நடனக் கலைஞர்களும்!
சூயஸ் கேப்சூலில் பயணித்த கோச் கஜகஸ்தானில் நேற்று மதியம் 03.12 மணிக்கு பத்திரமாக தரையிரங்கினார். கோச்சின் முதல் விண்வெளி பயணமாகும் இது. ஆனாலும் இந்த பயணத்திலேயே 328 நாட்கள் அவர் தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. பெண்களால் எவ்வளவு நாட்களுக்கு விண்வெளியில் சமாளிக்க முடியும் என்பதை அறிந்து கொள்ள நாசாவிற்கு இந்த ஆராய்ச்சி மிகப்பெரிய உதவியாக அமையும். ஏன் என்றால் நாசா மீண்டும் நிலாவுக்கு மனிதர்களை அனுப்ப உள்ளது. அதே போன்று ஆர்டெமிஸ் என்ற திட்டத்தின் கீழ் செவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்பும் திட்டத்திலும் ஈடுபட்டு வருகிறது நாசா.
கேப்சூலில் இருந்து வெளியே வந்த கோச் சிரித்த வண்ணம் தனக்கு உதவிய க்ரு மெம்பர்களுக்கு தம்ஸ்-அப் செய்தார். போஸ்ட்-ஃப்ளைட் செக்-அப்பிற்காக அவர் உடனே அழைத்து செல்லப்பட்டார். அவரை பரிசோதனை செய்தவர்கள் அவர் முழுமையான ஆரோக்கியத்தில் உள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. கோச், வடகெரலோனாவில் இருக்கும் ஜாக்சன்வில்லில் பிறந்து வளர்ந்தவர். தற்போது டெக்ஸாசில் தன்னுடைய கணவன் பாப்புடன் தங்கி வருகிறார். இதற்கு முன்பு பார்மிட்டானோ மற்றும் எஸ்கேவோர்ட்ஸோவ் ஆகியோர் 201 நாட்கள் விண்வெளியில் தங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.