/indian-express-tamil/media/media_files/2025/04/21/Jh9C1BdvUa8G9BFVHJSY.jpg)
70-வது பிறந்தநாள் கொண்டாட பூமிக்கு வந்த நாசா விண்வெளி வீரர்!
அமெரிக்காவை சேர்ந்த மூத்த நாசா வீரர் டான் பெட்டிட் (வயது 70). நாசாவின் சிறந்த வீரரான இவர் விண்வெளிக்கு இதுவரை 3 முறை சென்று திரும்பியுள்ளார். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் ரஷ்யா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சோயூஸ் விண்கலம் மூலமாக மீண்டும் விண்வெளிக்கு சென்றார்.அங்கிருந்தபோது நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோருடன் இணைந்து பணியாற்றி வந்தார். இந்த பயணத்தின்போது சுமார் 220 நாட்கள் அங்கு தங்கியிருந்தார்.
இந்நிலையில், நேற்று அவரது 70வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக பூமிக்கு திரும்ப முடிவு செய்தார். இதனை தொடர்ந்து சக ரஷ்யா வீரர்களுடன் சோயூஸ் எம்.எஸ்-26 விண்கலம் மூலமாக பூமிக்கு திரும்பினார். கஜகஸ்தான் அருகே அவர்களுடைய விண்கலம் கடலில் பத்திரமாக தரையிறங்கியதைத் தொடர்ந்து டான் பெட்டிட் உள்ளிட்டவர்கள் அதிலிருந்து மீட்கப்பட்டனர்.
Happy birthday, @astro_Pettit! Many happy returns (including this one) 🥳
— NASA (@NASA) April 20, 2025
The MS-26 Soyuz spacecraft touched down in Kazakhstan at 9:20pm ET—or, in local time, 6:20am April 20, Pettit's 70th birthday. pic.twitter.com/qFM5fAxnA0
இதன் மூலம் விண்வெளியில் அதிக வயதில் தங்கியிருந்தவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக டான் பெட்டிட் மாறியுள்ளார். உலகின் வயதான நபர் ஒருவர் விண்வெளியில் அதிக நாட்கள் தங்கியிருந்தது இதுவே முதல்முறையாகும். அவர் தன்னுடைய வாழ்நாட்களில் 590 நாட்கள் விண்வெளியில் கழித்துள்ளார். நாசா விமானம் மூலம் அவர் கஜகஸ்தானில் இருந்து புளோரிடாவுக்கு அழைத்து வர நாசா திட்டமிட்டு உள்ளது.
Welcome home! @Astro_Pettit and his cosmonaut crewmates, Alexey Ovchinin and Ivan Vagner, completed their mission after seven months on the @Space_Station. https://t.co/FTa8rWrAgjpic.twitter.com/iQVJtHzTNp
— NASA (@NASA) April 20, 2025
சா்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து 2 ரஷிய விண்வெளி வீரா்கள் மற்றும் ஓா் அமெரிக்க விண்வெளி வீரரை அழைத்து வந்த ரஷியாவுக்குச் சொந்தமான ‘சோயுஸ் எம்எஸ்-26’ விண்கலம் ஞாயிற்றுக்கிழமை கஜகஸ்தானில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. விண்கலத்தில் இருந்து வீரா்கள் மூவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, பின்னா் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இதுதொடா்பாக ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘ரோஸ்கோஸ்மோஸ்’ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சா்வதேச விண்வெளி நிலையத்தில் 7 மாதங்கள் தங்கியிருந்து, ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டுவந்த ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி வீரா்களான அலெக்ஸி ஓவ்சினின், இவான் வாக்னா் மற்றும் அமெரிக்காவின் நாசா விண்வெளி வீரா் டான் பெட்டிட் ஆகியோா் சோயுஸ் எம்எஸ்-26 விண்கலத்தில் பூமிக்கு திரும்பினா். இந்த விண்கலமானது கஜகஸ்தானின் ஜெஸ்காஸ்கன் நகருக்கு அருகிலுள்ள கசாக் புல்வெளிப் பரப்பில் ஞாயிறு காலை 6.20 மணிக்கு பாதுகாப்பாகத் தரையிறங்கியது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
According to NASA officials at the landing site, @Astro_Pettit is doing well and in the range of what is expected for him following return to Earth.
— NASA (@NASA) April 20, 2025
What's expected for him? In his own words during an April 16 pre-departure interview, "This is a physiological thing. It affects…
3 வீரா்களும் விண்வெளியில் 220 நாள்கள் தங்கியிருந்து, பூமியை 3,520 முறை சுற்றி வந்ததாக நாசா வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. பூமிக்குத் திரும்பிய பிறகு வழக்கமான முதல்கட்ட மருத்துவப் பரிசோதனைக்காக கஜகஸ்தானின் கரகண்டாவில் உள்ள மையத்துக்கு வீரா்கள் அழைத்துச் செல்லப்பட்டனா். அடுத்த கட்டமாக, நாசா வீரா் டான் பெட்டிட், அமெரிக்காவின் டெக்சாஸ் மகாணம் ஹூஸ்டனில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்துக்கும், ரஷிய வீரா்கள் ஓவ்சினின் மற்றும் வாக்னா், ரஷியாவின் ஸ்டாா் சிட்டியில் உள்ள பயிற்சித் தளத்துக்கும் மாற்றப்பட உள்ளனா்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.