/indian-express-tamil/media/media_files/kv1CeRttIyo5r71ijpug.jpg)
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, நிலவை சுற்றி வரும் மர்ம பொருள் வெள்ளி சர்ப்போர்டு வடிவிலான பொருளின் படங்களை வெளியிட்டுள்ளது. நாசாவின் லூனார் ரீகனைசன்ஸ் ஆர்பிட்டர் (எல்.ஆ.ர்ஓ) மூலம் படங்கள் எடுக்கப்பட்டன. அவை மார்வெலின் 'சில்வர் சர்ஃபர்' பாத்திரம் பயன்படுத்தும்
பலகை போன்ற பொருளாக உள்ளது என்று கூறியுள்ளது. இது அடையாளம் காணப்படாத பறக்கும் பொருள் (UFO) ஏலியன்களா? என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.
பின்னர் என்ன இது?
'நியூயார்க் போஸ்ட்' கருத்துப்படி, இது கொரிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் அனுப்பப்பட்ட டானுரி சந்திர சுற்றுப் பாதையின் படங்கள் ஆகும். அதாவது, நாசாவின் எல்.ஆர்.ஓ உண்மையில் அதன் தென் கொரிய நிறுவனத்தின் இரண்டு சுற்றுப் பாதைகளும் ஒன்றையொன்று கடந்து சென்றன என்று கூறியது.
மார்ச் 5 மற்றும் 6-க்கு இடையில் இரண்டும் ஒன்றுக்கொன்று இணையாக ஆனால் எதிரெதிர் திசைகளில் ஜிப் செய்த போது எடுக்கப்பட்டது என்று கூறப்பட்டது. அதனால் இது யு.எஃப்.ஓ அல்ல என்றும் விளக்கப்பட்டுள்ளது.
சந்திரனைச் சுற்றி வரும் மர்ம பொருளின் படம் யு.எஃப்.ஒ அல்ல. கொரிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் அனுப்பப்பட்ட டானுரி சந்திர சுற்றுப் பாதையின் படங்கள் இவை என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் நிலவை சுற்றி வரும் தனுரியின் உருவம் சிதைந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. நாசா மேலும் கூறியது, "எல்ஆர்ஓவின் கேமரா வெளிப்பாடு நேரம் மிகக் குறைவாக இருந்தாலும், 0.338 மில்லி விநாடிகள் மட்டுமே என்றாலும், இரண்டு விண்கலங்களுக்கிடையில் ஒப்பீட்டளவில் அதிக பயண வேகம் இருப்பதால், பயணத்தின் எதிர் திசையில் டானுரி அதன் அளவை 10 மடங்கு அதிகமாகப் உள்ளது என்றும் நாசா தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.