நிலாவில் ரோபோ : நிலவிற்கும் செவ்வாய் கிரகத்திற்கும் மிக விரைவில் மனிதர்களை அனுப்ப தீவிர முயற்சி செய்யும் நாசா. அமெரிக்க காங்கிரஸ்ஸிடம் இது குறித்து தகவல் தெரிவித்த நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் “தங்களின் ஆராய்ச்சினை மனிதர்கள் மற்றும் ரோபோக்களை விண்வெளிக்கு அனுப்புவது குறித்து தொடர்ந்து தீவிரமான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறோம்” என்று குறிப்பிட்டிருக்கிறது.
செப்டம்பர் 24ம் தேதி இது தொடர்பான அறிக்கையை சமர்பித்த நாசா “மனிதனின் சக்திக்கு அப்பாற்பட்ட எல்லையில், வேற்று கிரகங்களில், உலகின் பிற பகுதிகளில் ஆராய்ச்சியினை மேற்கொள்வதற்காக ரோபோக்களை உருவாக்கும் முனைப்பில் நாசா ஈடுபட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.
முக்கியமான கொள்கைகளை நோக்கி பயணிக்கும் நாசா
மனிதர்களை மீண்டும் நிலாவிற்கு அனுப்பவது குறித்தும், செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பவது குறித்தும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருக்கிறது. 2020ம் ஆண்டில் நிலவிற்கு மனிதர்களை அனுப்ப இருப்பதாகவும், அதற்காக பிரத்யேகமாக திட்டங்களையும் தீட்டி வருகிறது நாசா.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
நிலவில் அமெரிக்காவின் நிரந்தரமான கட்டுமானத்தை நிறுவுவதிலும் ஆர்வம் காட்டி வரும் அமெரிக்கா அதற்கான பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் அந்த 'கேட்வே’யின் உதிரி பாகங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஓரியான் மற்றும் எஸ்.எல்.எஸ் கொண்டு இந்த கேட்வே பாகங்களை விண்ணில் ஒருங்கிணைக்க இருக்கிறது நாசா.