பல மாத காத்திருப்புக்குப் பிறகு, பென்னு சிறுகோளில் இருந்து பெறப்பட்ட விலைமதிப்பற்ற மாதிரிகளை
அணுக முடிந்ததாக நாசா வெள்ளிக்கிழமை தெரிவித்தது. மாதிரி கண்டெய்னரில் ஃபாஸ்டென்சர்கள் சிக்கி கொண்டதால் ஓசிரிஸ் ரெக்ஸ் திறக்க முடியாமல் பல மாதங்கள் வைக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த சிக்கல்கள் நீங்கி விலைமதிப்பற்ற பென்னு சிறுகோள் மாதிரிகளை பெற்றதாக நாசா கூறியுள்ளது.
ஜனவரி 10-ம் தேதி, ஓசிரிஸ் ரெக்ஸில் சிக்கிய ஃபாஸ்டென்சர்களை நாசா பொறியாளர்கள் அகற்ற முடிந்தது. இந்த கொள்கலன் விலைமதிப்பற்ற சிறுகோள் மாதிரிகளை கொண்டு செல்கிறது. சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு OSIRIS-Rex விண்கலத்தால் சேகரிக்கப்பட்ட பென்னு என்ற சிறுகோளில் இருந்து சுமார் 250 கிராம் மாதிரி பொருட்கள் தற்போது பூமிக்கு கொண்டு வரப்பட்டது.
விண்வெளியில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு, OSIRIX-REx மிஷன் "பார்சல்" மாதிரி கொள்கலனை கிரகத்தின் வளிமண்டலத்தில் நுழையாமல் பூமிக்கு அனுப்பியது. பென்னு மாதிரிகளுடன் காப்ஸ்யூல் பூமிக்கு அனுப்பபட்டது. அமெரிக்க விண்வெளி நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட உட்டா பாலைவனத்தில் காப்ஸ்யூல் பத்திரமாக தரையிறங்கியது.
மாதிரியை சேகரிக்கப் பயன்படுத்தப்பட்ட கையில் சிக்கியிருந்த சில பொருட்களின் ஆரம்ப பகுப்பாய்வு, அதிக கார்பன் உள்ளடக்கம் மற்றும் நீர் இருப்பதற்கான ஆதாரங்களை வெளிப்படுத்தியது. அடிப்படையில், இது 4.5 பில்லியன் ஆண்டுகள் பழமையான சிறுகோள் ஆகும். மனிதர்கள் வாழத் தேவையான தனிமங்கள் அங்கு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
முழு மாதிரி கொள்கலனை திறந்த பிறகு, NASA அதிகாரிகள் உயர் தெளிவுத்திறன் கொண்ட துல்லியமான புகைப்படம் எடுத்தல் மற்றும் சிறுகோள் பொருளுடன் திறந்த TAGSAM (Touch-and-Go-Sample-Acquisition-Mechanism) மேலே உள்ள புகைப்படத்தைப் பிடிக்க, அரை-தானியங்கி ஃபோகஸ் ஸ்டாக்கிங் செயல்முறையைப் பயன்படுத்துவர்.
அடுத்து கண்டெய்னரில் உள்ள மெட்டல் காலர் அகற்றப்படும். பின்னர் மாதிரி துகள்கள் தட்டில் வைக்கப்படும். அந்த துகள்கள் மீண்டும் புகைப்படம் எடுக்கப்படும். இதன் பின் அவை டெக்சாஸின் ஹூஸ்டனில் உள்ள ஏஜென்சியின் ஜான்சன் விண்வெளி மையத்தில் வைக்கப்படும் என்று நாசா கூறியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“