நாசாவின் DART விண்கலம், 2022-ம் ஆண்டு Dimorphos என்ற சிறுகோள் மீது வேண்டுமென்றே மோத செய்து சோதனை செய்தது. இது ஒரு வரலாற்று செயலாக செய்யப்பட்டது. அதோடு Dimorphos மற்றும் அதன் பெரிய துணையான டிடிமோஸ் (Didymos) ஆகியவற்றை high-resolution படங்களை எடுத்தது.
இந்தப் படங்கள், பூமிக்கு அருகில் உள்ள இந்த சிறுகோள்களின் சிக்கலான வரலாற்றை குறியிடவும் மற்றும் பைனரி சிறுகோள் அமைப்புகளின் உருவாக்கத்தைப் புரிந்துகொள்ளவும் விஞ்ஞானிகளுக்கு உதவுகிறது. இது இப்போது, ஒரு சிறிய நிலவுகோளுடன் ஒரு முதன்மை சிறுகோளைச் சுற்றி வருகிறது.
டிடிமோஸின் பள்ளங்கள் மற்றும் அதன் மேற்பரப்பு பகுப்பாய்வு இது சுமார் 12.5 மில்லியன்
ஆண்டுகளுக்கு முன்பு உருவானது என்று கூறுகிறது, அதே நேரத்தில் டிமார்போஸ் சுமார் 300,000 ஆண்டுகளுக்கு முன்பு உருவானது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
டிடிமோஸ் செவ்வாய் மற்றும் வியாழன் இடையே உள்ள முக்கிய சிறுகோள் பெல்ட்டில் உள் சூரிய குடும்பத்திற்கு தள்ளப்படுவதற்கு முன்பு தோன்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
டிடிமோஸ் மற்றும் டிமார்போஸில் உள்ள மிகப்பெரிய கற்பாறைகளை ஆய்வு செய்ததில், இந்த சிறுகோள்கள் அதன் முதன்மை சிறுகோளின் அழிவிலிருந்து உருவானது என்று தெரியவந்தது.
இரண்டு சிறுகோள்களின் மேற்பரப்புகளும் தளர்வான மணலை விட மிகவும் பலவீனமானமாக உள்ளது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த Olivier Barnouin குறிப்பிட்டார்.
செப்டம்பர் 26, 2022 அன்று டிமார்போஸை மணிக்கு 14,000 மைல் வேகத்தில் தாக்கி DART விண்கலம் திசை திருப்பியது. டிடிமோஸ் மற்றும் டிமார்போஸ் பூமிக்கு உடனடி அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை என்றாலும், ஒரு சிறுகோளின் பாதையை மாற்றும் திறனை வெற்றிகரமாக நிரூபித்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“