NASA Photo not found Vikram Lander: அமெரிக்க வின்வெளி நிறுவனமான நாசாவின் வின்கலம் சமீபத்தில் நிலவுப் பகுதியில் சுற்றிவரும்போது, எடுத்த புகைப்படத்தில் இந்தியா நிலவுக்கு அனுப்பிய சந்திரயான் 2 வின்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியதற்கான அடையாளங்கள் ஏதும் காணவில்லை என்று தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 7 ஆம் தேதி இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் வின்கலத்தில் இணைக்கப்பட்ட விக்ரம் லேண்டரை நிலவின் தென் துருவப் பகுதியில் சாஃப்ட் லேண்டிங்கில் தரையிறக்க முயற்சித்தது. அப்போது அது இஸ்ரோவுடனான தொடர்பை இழந்தது.
நிலவில் சந்திரயான் 2 விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்தை குறிவைத்து நிலவை சுற்றிவரும் வின்கலம் அக்டோபர் 14 ஆம் தேதி எடுத்த புகைப்படத்தில் லேண்டர் தரையிறங்கியதற்கான எந்த ஆதாரமும் காணவில்லை என்று எல்.ஆர்.ஓ மிஷன் திட்டத்தின் விஞ்ஞானி நோவா எட்வர்ட் பெட்ரோ பிடிஐ உடனான சிறப்பு மின்னஞ்சல் உரையாடலில் தெரிவித்துள்ளார்.
கேமரா குழு மாற்றத்தைக் கண்டறியும் நுட்பத்தைப் பயன்படுத்தி படங்களை கவனமாக ஆராய்ந்தது என்று பெட்ரோ கூறினார். அக்டோபர் 14 அன்று பெறப்பட்ட படத்தில் தரையிறங்கும் முயற்சிக்கு முன்னதாக எடுக்கப்பட்ட ஒரு படத்துடன் ஒப்பிட்டு விகிதத்தைப் பயன்படுத்தி பார்த்துள்ளனர்.
இந்த அணுகுமுறை, சந்திரனில் புதிய விண்கல் தாக்கங்களைக் கண்டறியப் பயன்படுகிறது. இது சமீபத்திய பெரெஷீட் லேண்டரைக் கண்டுபிடிக்க உதவியது. “விக்ரம் லேண்டர் நிழல் பகுதியில் அல்லது தேடல் பகுதிக்கு வெளியே அமைந்திருக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால், அட்சரேகைக்கு கீழே ஏறக்குறைய 70 டிகிரி தெற்கே இருப்பதால் இப்பகுதி ஒருபோதும் நிழல்களில் இருந்து முற்றிலும் விடுபடுவதில்லை.” என்று எல்.ஆர்.ஓ மிஷன் துணை திட்ட விஞ்ஞானி ஜான் கெல்லர் பி.டி.ஐ -க்கு கூறினார்.
எல்.ஆர்.ஓ இதற்கு முன்பு பறக்கும்போது செப்டம்பர் 17 ஆம் தேதி விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்தைக் கடந்து அப்பகுதியின் மிகவும் தெளிவான படங்களின் தொகுப்பைப் பெற்றது. எல்.ஆர்.ஓ குழுவால் அப்போது கூட லேண்டரைக் கண்டுபிடிக்கவோ அல்லது படம்பிடிக்கவோ முடியவில்லை.