நாசா க்ரூ-8 திட்டத்தில் ஸ்பேஸ்எக்ஸின் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் 4 வீரர்கள் அடங்கிய டிராகன் விண்கலத்தை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெற்றிகரமாக அனுப்பியுள்ளது. புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள் லாஞ்ச் காம்ப்ளக்ஸ் 39A-ல் இருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. எண்டெவர் என பெயரிடப்பட்டு சுற்றுப் பாதைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) எட்டாவது வணிகக் குழு சுழற்சி பணியைக் குறிக்கிறது.
க்ரூ-8 பணியில் நாசாவின் மேத்யூ டொமினிக், மைக்கேல் பாராட், ஜீனெட் எப்ஸ் மற்றும் ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கிரெபென்கின் ஆகியோர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இது அவர்களின் வழக்கமான பயணம் மட்டுமல்லாமல் அவர்கள் 200-க்கும் மேற்பட்ட அறிவியல் சோதனைகள் மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகளை நடத்த உள்ளனர் என்றும் நாசா கூறியுள்ளது.
இந்த நடவடிக்கைகள் விண்வெளி பற்றிய மனித புரிதலை மேம்படுத்த, பூமியில் மீண்டும் நன்மைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன, இது விண்வெளி ஆய்வின் புதிய சகாப்தத்தை குறிக்கிறது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏற்கனவே உள்ள Expedition 70 மிஷன் வீரர்களுடன் தற்போது இந்த 4 வீரர்கள் சேர்ந்த உடன் விண்வெளி நிலையத்தில் இருக்கும் வீரர்கள் எண்ணிக்கை 11 ஆக உயரும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“