வீனஸ் நமது பூமியைப் போன்ற ஒரு கிரகமாக உள்ளது. நமது கோளுக்கு மிக அருகில் உள்ள இந்த கிரகத்தில் ஆயிரக்கணக்கான எரிமலைகள் இன்னும் ஆக்டிவ் ஆக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இத்தாலியில் உள்ள நாசா விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, கிரகத்தில் சமீபத்திய எரிமலை செயல்பாட்டின் நேரடி புவியியல் சான்றுகள் இரண்டாவது முறையாகக் காணப்பட்டன.
விண்வெளி ஏஜென்சியின் மாகெல்லன் பணியிலிருந்து காப்பகப்படுத்தப்பட்ட தரவை பகுப்பாய்வு செய்த பின்னர், விஞ்ஞானிகள் வீனஸில் புதிய எரிமலை ஓட்டங்களை அவதானித்ததாகக் கூறுகிறார்கள், இந்த கிரகம் 1990 மற்றும் 1992-க்கு இடையில் எரிமலையாக செயல்பட்டதாகக் கூறுகிறது.
நாசாவின் மாகெல்லன் விண்கலம் 1990-ல் வீனஸை அடைந்தது மற்றும் அக்டோபர் 12, 1994 அன்று வீனஸின் வளிமண்டலத்தில் மறைவதற்கு முன்பு கிரகத்தின் முழு மேற்பரப்பையும் வரைபடமாக்கிய முதல் விண்கலம் இதுவாகும். அதன்பிறகு, தற்போது வரை வீனஸை ஆராய வேறு எந்த விண்கலமும் அங்கு அனுப்பப்படவில்லை.
இரண்டு ஆண்டுகளாக எரிமலைச் செயல்பாடுகளைத் தேடி மகெல்லன் பகிர்ந்துகொண்ட பழைய தரவுகளை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் அங்குள்ள எரிமலைகள் இன்னும் ஆக்டிவ் ஆக இருப்பதாகக் கூறுகிறது.
புதிய கருவிகளைப் பயன்படுத்தி இந்த ஆய்வு மேற்கொண்டதில் , சிஃப் மோன்ஸ் எரிமலையின் மேற்குப் பகுதியிலும் நியோப் பிளாண்டியாவின் மேற்குப் பகுதியிலும் புதிய எரிமலைக் குழம்புகள் இருப்பதைக் கண்டறிந்ததாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“