செவ்வாய் கிரகத்தில் இருந்து பாறை மற்றும் மண் மாதிரிகளை விரைவாகவும் குறைந்த விலை திட்டத்திலும் கொண்டு வர நாசா புதிய யோசனைகளை மேற்கொள்வதாக நாசாவின் நிர்வாகி பில் நெல்சன் கூறினார். 2040-ல் இந்த திட்டத்தை செயல்படுத்த நாசா திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது இதை முன்கூட்டியே செய்ய நாசா தீவிரம் காட்டி வருவதாக கூறப்பட்டுள்ளது.
நெல்சன் கூறுகையில், "செவ்வாய் மாதிரிகளை கொண்டு வருவது நாசா இதுவரை மேற்கொண்ட மிக சிக்கலான பணிகளில் ஒன்றாகும். அடிப்படை என்னவென்றால் இந்த திட்டத்திற்கு 11 பில்லியன் டாலர் பட்ஜெட் என்பது மிகவும் உயர்ந்த விலையாகும். மேலும் 2040 என்பது இந்த திட்டத்திற்கு நீண்ட நாட்களாகும்" என்றார். இந்த திட்டத்திற்கான பட்ஜெட்டும் முக்கிய காரணமாகும்.
குறைந்த பட்ஜெட்டில் திட்டத்தை செயல்படுத்தல் மற்றும் குறைந்த காலக்கெடுவில் மாதிரிகளை கொண்டு வருதல் ஆகியவை மேற்கொள்ள நாங்கள் தற்போது யோசித்து வருகிறோம். திருத்தப்பட்ட பணித் திட்டங்களுக்கான முன்மொழிவுகளுக்காக நிறுவனம் அதன் உள் குழுக்கள் மற்றும் விண்வெளித் தொழில் கூட்டாளர்களை அணுகுகிறது.
2030-க்குள் இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்படுகிறது என்று நெல்சன் கூறினார். 2021-ம் ஆண்டு செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியதில் இருந்து, பெர்செவரன்ஸ் ரோவர் பூமிக்கு திரும்புவதற்கான மாதிரிகளை சேகரித்து வருகிறது.
செவ்வாய் கிரக மாதிரிகளை கொண்டு வருவதற்கான திட்டம் நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் கூட்டு முயற்சியாகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“