மிகவும் பழமையான மற்றும் மிகப் பெரியதான பென்னு என்ற சிறுகோளின் மாதிரியை தனது விண்கலம் மூலம் சேகரித்த நாசா அதை பூமியின் புவியீர்ப்பு விசைக்கு மாற்றி சிறுகோள் மாதிரியின் ஒரு காப்ஸ்யூலை பூமி நோக்கி வீசியது. இந்த மாதிரி பல மைல் தூரம் கடந்து வந்து கடந்த செப்டம்பர் 24-ம் தேதி அமெரிக்காவில் உட்டாவில் உள்ள பாலைவனத்தில் பாராசூட் மூலம் பாதுகாப்பாக தரையிறங்கியது.
இந்த மாதிரிகள் மூலம் விஞ்ஞானிகள் பூமி எவ்வாறு தோன்றியது என்ற ஆராய்ச்சிகளையும் பூமி பற்றின ரகசியங்களையும் ஆய்வு செய்ய முடியும் எனக் கூறியுள்ளனர். அதனால் நாசாவின் இந்த முயற்சி உலக நாடுகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுகோள் மாதிரிகளை சேகரிக்க நாசா ஓசிரிஸ்-ஆர்எக்ஸ் (OSIRIS-REx ) விண்கலத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விண்வெளிக்கு அனுப்பியது. இந்த நிலையில் சிறுகோள் காப்ஸ்யூலைப் பிரித்து படிப்படியான ஆய்வுகளை மேற்கொள்ள விஞ்ஞானிகள் தயாராகி வருகின்றன.
நாம் நினைப்பது போல் காப்ஸ்யூலை அப்படியே பிரித்து பார்க்க முடியாது. அதை சுத்தம் செய்து அறிவியல் முறையில் ப்ராசஸ் செய்த பின் மாதிரிகள் கண்டறியப்பட்டு ஆய்வுகள் தொடங்கும். காப்ஸ்யூலின் ஏவியோனிக்ஸ் டெக்கில் கருப்பு தூசி மற்றும் குப்பைகள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர் என்று நாசா செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. மாதிரிகள் மாசுபடுவதைத் தடுக்க வடிவமைக்கப்பட்ட கையுறை பெட்டியின் உள்ளே அலுமினிய மூடி அகற்றப்பட்டது.
காப்ஸ்யூல் தரையிறங்கிய மறுநாள் செப்டம்பர் 25 அன்று, ஹூஸ்டனில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்திற்கு அனுப்பபட்டது. அங்கு விஞ்ஞானிகள் டச் அண்ட் கோ சாம்பிள் அக்யூசிஷன் மெக்கானிசத்தை (TAGSAM) பயன்படுத்தி பிரித்து அதன் உள்ளே உள்ள மொத்த மாதிரியைப் பெறுவதற்கு வேலை செய்வார்கள்.
TAGSAM குப்பியில் இருந்து பிரிக்கப்பட்டவுடன், அது சுமார் இரண்டு மணி நேரம் வரை நைட்ரஜன் சூழலைக் கொடுக்க சீல் செய்யப்பட்ட பரிமாற்ற கொள்கலனில் செருகப்படும். இந்தக் கொள்கலன் அணிக்கு TAGSAM ஐ மற்றொரு கையுறை பெட்டியில் செருகுவதற்கு போதுமான நேரத்தை வழங்கும்.
ARS டெக்னிகாவின் கூற்றுப்படி, OSIRIS-REx குழு உறுப்பினர்கள் சிறுகோள் மாதிரி குப்பியில் இருந்து சில தூசிகளை துடைத்து, ஆய்வுக்காக ஒரு ஆய்வகத்திற்கு அனுப்புவார்கள் என்று உறுதியாக நம்பலாம். ஆனால் விஞ்ஞானிகள் குப்பியின் மூடியைத் திறந்தவுடன் உடனடியாகத் தெரிந்த தூசித் துகள்கள் பென்னு என்ற சிறுகோளிலிருந்து வந்ததா என்பதில் சந்தேகம் உள்ளது.
விண்கலம் 2020 ஆம் ஆண்டில் 500 மீட்டர் பென்னு என்ற சிறுகோளின் " டச் அண்ட் கோ" சுற்றுப்பாதை உயர்வு செய்தபோது, அதன் ஆய்வு சுமார் 250 கிராம் பொருட்களை சேகரித்ததாக நாசா மதிப்பிட்டுள்ளது.
வரவிருக்கும் வாரங்களில் TAGSAM- ஐ பிரித்தெடுக்கும் வரை, விண்கலம் பூமிக்கு எவ்வளவு பொருட்களை கொண்டு வந்துள்ளது என்பது பற்றி தெரியாது. ஆரம்பத்தில் மதிப்பிடப்பட்ட 250 கிராம் என்பது பணி வெற்றிக்கான குறைந்தபட்சத் தேவையை விட நான்கு மடங்கு அதிகம் ஆகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“