நாசாவின் (தேசிய ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன்) ஓசிரிஸ்-ஆர்எக்ஸ் (OSIRIS-REx) விண்கலம் சேகரித்த பென்னு என்ற சிறுகோளின் மாதிரிகளை ஒரு காப்ஸ்யூலில் அடைத்து அதை பூமிக்கு அனுப்பியது. இதையடுத்து பூமிக்கு கொண்டு வரப்பட்ட சிறுகோள் மாதிரியின் ஆரம்ப க்யூரேஷன் செயல்முறை எதிர்பார்த்ததை விட மிகவும் மெதுவாக செல்கிறது. ஆனால் அதற்கு ஒரு நல்ல காரணம் இருக்கிறது- என்னவென்றால் விஞ்ஞானிகள் எதிர்பார்த்ததை விட விண்கலம் அதிகமான பொருட்களை கொண்டு வந்துள்ளது.
கடந்த மாத இறுதியில் காப்ஸ்யூல் மூடியை சுத்தம் செய்யும் பணி தொடங்கியது. அப்போது அதன் மேலே ஏராளமான பொருட்கள் கிடைத்தது. முறைப்படி TAGSAM (டச்-அண்ட்-கோ மாதிரி கையகப்படுத்தும் இயந்திரம்) பயன்படுத்தி மூடியை அகற்றும் பணி செய்யப்பட்டது. அதன் பணியின் போதே மூடியிலேயே ஏராளமான மாதிரிகள் கிடைத்தாக விஞ்ஞானிகள் கூறினர்.
https://indianexpress.com/article/technology/science/nasa-osiris-rex-mission-asteroid-sample-8967762/
TAGSAM கருவிக்கு வெளியில் இருந்து சேகரிக்கப்பட்ட முதல் மாதிரிகள் இப்போது விரைவான பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இது காப்ஸ்யூலின் முழுமையான மாதிரி பொருட்களில் என்ன இருக்கும் என்பதை யூகிக்க முடியும் எனக் கூறுகின்றனர்.
OSIRIS-REx விண்கலத்தில் உள்ள டச்-அண்ட்-கோ கேமரா அமைப்பு (TAGCAM) காப்ஸ்யூல் விண்வெளியில் இருந்து வீசப்பட்ட போது படம் எடுத்துள்ளது. சுவாரஸ்யமாக, OSIRIS-REx விண்கலத்தின் பணிகள் இன்னும் முடியவில்லை. இது இப்போது Apophis என்ற சிறுகோளை நோக்கி ஒரு புதிய பெயருடன் OSIRIS-APEX என்ற பெயரில் புதிய பயணத்தை தொடங்கியுள்ளது.
மிகவும் பழமையான மற்றும் மிகப் பெரியதான, ஆபத்தான பென்னு என்ற சிறுகோளின் மாதிரியை OSIRIS-REx விண்கலம் அதன் காப்ஸ்யூல் கருவியில் சேகரித்தது. நாசா அதை பூமியின் புவியீர்ப்பு விசைக்கு மாற்றி சிறுகோள் மாதிரிகள் அடங்கிய காப்ஸ்யூலை பூமி நோக்கி வீசச் செய்தது. இந்த மாதிரி பல மைல் தூரம் கடந்து வந்து கடந்த செப்டம்பர் 24-ம் தேதி அமெரிக்காவில் உட்டாவில் உள்ள பாலைவனத்தில் பாராசூட் மூலம் பாதுகாப்பாக தரையிறங்கியது. நாசாவின் இந்த ஆய்வை உலக நாடுகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.