நாசா திங்களன்று சூரிய குடும்பத்தில் 5-வது மற்றும் மிகப்பெரிய கிரகமான வியாழன் கோளில் ஏற்பட்ட புயலை படம் எடுத்துள்ளது. அது கிரகத்தின் "புயல் வானிலை-ஐ" காட்டுகிறது. இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்த நாசா, இந்த புயல் வானிலை "ஆண்டுகள், தசாப்தங்கள் அல்லது பல நூற்றாண்டுகள் கூட நீடிக்கலாம்" என்று கூறியது. மேலும் மணிக்கு 643 கி.மீ வேகத்தில் காற்று வீசுகிறது என்றும் கூறியுள்ளது.
வியாழனின் வளிமண்டலத்தில் நீலம், வெள்ளை மற்றும் பழுப்பு நிற மேகங்கள் மற்றும் புயல்கள் சுழல்வதாக நாசா படங்களை விவரித்தது. "மேகங்கள் கிரகம் முழுவதும் பொறிக்கும்போது மெதுவாகப் பாய்ந்து ஒன்றையொன்று சுற்றி வளைகின்றன" என்று விண்வெளி நிறுவனம் கூறியது. இந்த படங்கள் நாசாவின் "ஜூனோ மிஷன்" விண்கலம் மூலம் எடுக்கப்பட்டது என்று கூறியுள்ளது. வியாழன் கோளை ஆய்வு செய்வதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட விண்கலத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.
ஜூனோ இந்த புயலை வியாழன் கிரகத்தின் மேக உச்சியில் இருந்து சுமார் 8,000 மைல்கள் (13,000 கிமீ) பறக்கும் போது வியாழனின் தனித்துவமான பேண்டட் ஜெட் ஸ்ட்ரீம்களுக்குள் படம் பிடித்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“