செவ்வாய், சந்திரனில் தண்ணீர் சேகரிக்க உதவும் மாணவர்களுக்கு 10,000 டாலர் பரிசு: நாசா அறிவிப்பு

நாசா நிறுவனம், சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் நீர் சேகரிப்பதற்கான முறையை உருவாக்குவதில் பங்கேற்க பல்கலைக்கழக பொறியியல் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களை அனுப்ப அழைப்பு விடுத்துள்ளது.

By: August 17, 2020, 6:30:26 PM

அமெரிக்காவின் நாசா நிறுவனம், சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் நீர் சேகரிப்பதற்கான முறையை உருவாக்குவதில் பங்கேற்க பல்கலைக்கழக பொறியியல் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களை அனுப்ப அழைப்பு விடுத்துள்ளது.

அமெரிக்காவின் தேசிய ஏரோநாட்டிக்ஸ் அண்ட் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் என்கிற நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம், சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் நீர் சேகரிப்பதற்கான முறையை உருவாக்குவதில் பங்கேற்க பல்கலைக்கழக அளவிலான பொறியியல் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களை அனுப்ப அழைப்பு விடுத்துள்ளது.

இதில் குழுக்கள் தங்களது முன்மாதிரி அல்லது முன்மொழியப்பட்ட கருத்து வடிவத்தை நவம்பர் 24, 2020 வரை சமர்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெறப்படும் வடிவமைப்புகளில், நாசா 10 குழுக்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்கள் அடுத்த மாதம் தேர்வு செய்யப்பட்டு அவற்றின் அமைப்புகளை உருவாக்குவார்கள். அதற்காக அவர்கள் அனைவரும் 10,000 டாலர் மேம்பாட்டு உதவித்தொகையை பெறுவார்கள்.

நீண்ட பயணங்களுக்கு நீர் அவசியம். விண்வெளி வீரர்கள் நீரைப் பயன்படுத்தி தாவரங்களை வளர்க்கவும், ராக்கெட் உந்துசக்தியை உருவாக்கவும் பயன்படுத்துகின்றனர். நீண்ட பயணங்களுக்கு நீர் தேவை என்பதால், வானத்தில் உள்ள பொருட்களில் இருந்து நீர் சேகரிக்கும் நுட்பங்களை உருவாக்க ஒரு திட்டம் தேவையாக உள்ளது.

ஆர்ட்டிமிஸ் திட்டத்தின் கீழ், விண்வெளி வீரர்கள் சந்திரனின் தென் துருவத்தில் தண்ணீரைத் தேடுவார்கள். ஆனால், அவர்கள் எந்த வடிவத்தில் தண்ணீரைக் கண்டுபிடிப்பார்கள் என்று தெரியவில்லை.

“ஆர்ட்டிமிஸ் திட்டத்திற்கான சந்திர மேற்பரப்பில் ஆண்களும் முதல் பெண்களும் ஆராயும்போது நாம் காணும் நீர் குடிப்பதற்கு முன்பு அகற்றப்பட வேண்டிய அசுத்தங்களுடன் கலக்கப்பட வேண்டும். அல்லது எரிபொருளாகப் பயன்படுத்தப்பட வேண்டும்” என்று நாசாவின் தலைமை தொழில்நுட்பவியலாளர் டக்ளஸ் டெரியர் கூறினார்.

“நிலவில் மட்டுமல்லாமல், செவ்வாய் கிரகத்திலும், நமது சூரிய மண்டலத்தின் பிற தொலைதூரங்களிலும் – நீரை எவ்வாறு பாதுகாப்பாகவும் திறமையாகவும் சேகரிப்பது என்பது நிலையான மனித ஆய்வுக்கு முக்கியமானது” என்று டக்ளஸ் டெரியர் கூறியுள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ், தகுதியான இளங்கலை மற்றும் பட்டதாரிகள், விண்வெளி வீரர்கள் பல்வேறு வகையான மேற்பரப்பு அடுக்குகளை அடையாளம் காணவும், வரைபடம் மற்றும் துளையிட உதவும் வன்பொருள்களை வடிவமைத்து உருவாக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், கிடைக்கும் பனிக் கட்டிகளில் இருந்து தண்ணீரைப் பிரித்தெடுப்பதற்கான ஒரு முறையையும் உருவாக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாஷிங்டனில் உள்ள நாசா தலைமையகத்தில் நாசாவின் அறிவியல் மிஷன் இயக்குநரகத்தில் (எஸ்எம்டி) அறிவியல் மற்றும் ஆய்வுகளுக்கான உதவி இயக்குனர் ரிச்சர்ட் (ரிக்) டேவிஸ் கூறுகையில், “நீரை பெறுவது என்பது விண்வெளி ஆய்வுக்கான முக்கிய கருத்தாகும். தொலைதூர உலகங்களில் மனிதர்கள் நிலத்தில் வாழ மற்றும் நீர் போன்ற வளங்களைப் பயன்படுத்த உதவும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள், நமது பிரபஞ்சத்தை முதல்தரமாக ஆராய்வதற்கான குறிப்பிடத்தக்க வாய்ப்புகளைத் திறக்கும்.” என்று கூறினார்.

தேர்ந்தெடுக்கப்படும் குழுக்கள் ஜூன் 2021இல் வர்ஜீனியாவின் ஹாம்ப்டனில் உள்ள நாசாவின் லாங்லி ஆராய்ச்சி மையத்தில் 3 நாள் போட்டியில் தங்கள் நீர் சேகரிப்பு முறைகளின் திறன்களை நிரூபிப்பார்கள். சிறந்த செயல்திறன் கொண்ட குழுக்கள் அவற்றைக் காண்பிப்பதற்காக வருங்கால நாசாவின் தேர்ந்தெடுக்கப்படும் நிகழ்வுகளிலும் அல்லது விண்வெளி மாநாடுகளிலும் பயண உதவித்தொகைகளும் வழங்கப்படும்.

“ஆர்ட்டிமிஸ் திட்டம் கல்விப்புலத்தில் பிரகாசமான எண்ணத்தை ஊக்குவிக்கிறது. மேலும் திறமையான மாணவர்களுக்கு மனித விண்வெளி ஆராய்ச்சியில் எதிர்காலத்திற்கு பங்களிக்க தனித்துவமான, கைகோர்த்து வாய்ப்புகளை வழங்குவது எங்களுக்கு முக்கியம்” என்று நாசாவின் விண்வெளி தொழில்நுட்ப மிஷன் இயக்குனரகத்தின் (எஸ்.டி.எம்.டி) துணை இணை நிர்வாகி டாக்டர் பிரசுன் தேசாய் கூறினார். மேலும் அவர், “போட்டியின் மூலம் அவர்களின் தொழில்நுட்ப முன்னேற்றங்களைக் காண நாங்கள் எதிர்நோக்கியுள்ளோம்” என்று கூறினார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், நாசா சிறந்த கழிப்பறை வடிவமைப்புக்கு ஒரு போட்டியை அறிமுகப்படுத்தியது. வெற்றி பெறுபவர்களுக்கு பரிசாக 20,000 டாலர்களைப் பெறுவார்கள் என்றும் அதே நேரத்தில் 2வது சிறந்த மற்றும் 3வது சிறந்த கண்டுபிடிப்புக்கான வெகுமதி முறையே 10,000 மற்றும் 5,000 டாலர்கள் பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Nasa to award students 10 000 dollar to help astronauts harvest water on moon mars

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X