அக்டோபர் 14-ம் தேதி வடக்கு மற்றும் தென் அமெரிக்காவின் பல பகுதிகளில் உள்ள மக்கள் சூரியன் அதன் 10% குறைந்த பிரகாசத்தை பார்ப்பார்கள். வளைய கிரகணம் நிகழும்போது ஒரு பிரகாசமான "நெருப்பு வளையம்" மட்டுமே இருக்கும். ஆனால் நியூ மெக்ஸிகோவில் உள்ள ஒயிட் சாண்ட்ஸ் பகுதியில் இருப்பவர்கள், வானத்தில் திடீர் பிரகாசமான கோடுகள் கிரகணத்தை நோக்கி செல்வதையும் காண்பார்கள். அது நாசா ஏவத் திட்டமிட்டுள்ள மூன்று ராக்கெட்டுகள் ஆகும்.
சூரிய ஒளியின் திடீர் வீழ்ச்சி (பிராகசம் குறைதல்) நமது கிரகத்தின் மேல் வளிமண்டலத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதை அறிய நாசா 3 ராக்கெட்டுகளை ஏவுகிறது. இது சவுண்டிங் ராக்கெட் மிஷன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த பணியானது கிரகண பாதை அல்லது APEPயைச் சுற்றியுள்ள வளிமண்டல இடையூறுகள் என்று அழைக்கப்படுகிறது. அயனோஸ்பியர் என்பது வளிமண்டலத்தின் அயனியாக்கம் செய்யப்பட்ட பகுதியாகும், இது கடல் மட்டத்திலிருந்து 48 கிலோமீட்டர் முதல் 965 கிலோமீட்டர் வரை காணப்படுகிறது.
கிரகண நேரத்தில் 3 ராக்கெட்கள்
சூரியனில் இருந்து வரும் புற ஊதா கதிர்வீச்சு எலக்ட்ரான்களை அணுக்களிலிருந்து பிரித்து அயனிகள் மற்றும் எலக்ட்ரான்களை உருவாக்கும் வளிமண்டலத்தின் ஒரு பகுதியாகும். சூரியனில் இருந்து வரும் நிலையான ஆற்றல், பரஸ்பரம் ஈர்க்கப்படும் இந்தத் துகள்களை நாள் முழுவதும் பிரிந்து விடாமல் காக்கிறது. ஆனால் சூரியன் அடிவானத்திற்குக் கீழே மூழ்கும்போது, அவை நடுநிலை அணுக்களாக மீண்டும் இணையலாம். சூரிய உதயத்தின் போது அவை மீண்டும் அயனியாக்கம் செய்யப்படுகின்றன.
APEP பணியானது மூன்று ராக்கெட்டுகளை ஏவுகிறத. முதலாவது உச்ச கிரகணத்திற்கு 35 நிமிடங்களுக்கு முன்பு, 2-வது உச்சக் கட்டத்தின்போது, 3-வது ராக்கெட் கிரகணம் முடிந்து 35 நிமிடங்களுக்குப் பிறகு ஏவப்படும் என்று நாசா கூறியுள்ளது. 3 ராக்கெட்களிலும் சிறிய அளவிளான 4 அறிவியல் கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. இவை Density, வெப்பநிலை மற்றும் எலக்ட்ரிக் மற்றும் மேகனெட்டிக் மாற்றங்களை கணக்கிடும் எனவும் கூறியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“