Advertisment

நிலவில் சந்திரயான் 3-க்கு அருகில் நோவா-சி விண்கலத்தை தரையிறக்கும் நாசா: இந்த புதிய திட்டம் என்ன?

ஐ.எம்-1 என அழைக்கப்படும் இந்த திட்டத்தில், விண்கலம் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கி அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது.

author-image
WebDesk
New Update
Nova-C lander.jpg
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Intuitive Machines தனது நோவா-சி லேண்டரை நிலவின் தென் துருவப் பகுதிக்கு அனுப்பத் தயாராகி வருகிறது. இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கி வரலாறு படைத்த இடத்திற்கு மிக அருகில் இதன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

Advertisment

ஐ.எம்-1 என அழைக்கப்படும் இந்த திட்டத்தில், விண்கலம் பேலோடுகளின் தொகுப்பை சுமந்து சென்று அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்வதை நோக்கமாகக்  கொண்டுள்ளது. அதாவது லேண்டர் சந்திரயான்-3 தரையிறங்கிய தென் துருவப் பகுதியில் தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

ஐ.எம்-1 நிலவில் இறங்குவது எங்கே?

மலாபெர்ட் ஏ, தேர்ந்தெடுக்கப்பட்ட தரையிறங்கும் தளம், 69 கிலோமீட்டர் நீளமுள்ள பெரிய மலாபெர்ட் பள்ளத்தை ஒட்டிய ஒரு செயற்கைக் கோள் பள்ளம் ஆகும்.

Intuitive Machines பணியின் நோவா-சி லேண்டர் நிலவின் தென் துருவத்தில் இருந்து சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் தரையிறக்கப்படுகிறது. இப்பகுதியின் முக்கிய அம்சமான மலாபெர்ட் மாசிஃப் அருகாமையில் இருப்பது இப்பகுதியின் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டுகிறது; நாசாவின் ஆர்ட்டெமிஸ் III பணிக்காக பரிசீலனையில் உள்ள 13  இடங்களில் இதுவும் ஒன்றாகும். 

Nasa  NovaC.jpg

நோவா-சி லேண்டருக்கான இந்தத் தளத்தைத் தேர்ந்தெடுப்பது, சந்திரனின் துருவ வளங்களை ஆராய்வதற்கும் புரிந்து கொள்வதற்கும் ஒரு மூலோபாய ஆர்வத்தை பிரதிபலிக்கிறது, இங்கு நீர் பனிகள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்யவும் இந்த லேண்டர் அனுப்பபடுகிறது. 

சந்திரயான்-3 தரையிறங்கிய சிவசக்தி புள்ளியில் இருந்து 1500 கிலோமீட்டர் தொலைவில்  நோவா-சி லேண்டர் தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

 “தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil 

Nasa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment