ஏப்ரல் 8-ம் தேதி திங்கட்கிழமை, சூரிய கிரகணத்தின் போது சந்திரனின் நிழலுக்கு 3 அறிவியல் ஒலி ராக்கெட்டுகளை (Sounding Rockets) செலுத்துவதாக நாசா அறிவித்துள்ளது. குறிப்பாக ஏப்ரல் 8-ம் தேதி வட அமெரிக்காவில் பகுதி சூரிய கிரகணம் நிகழும் போது ஏவ திட்டமிட்டுள்ளது.
கிரகணப் பாதையைச் சுற்றியுள்ள வளிமண்டல இடையூறுகள் (APEP), சூரிய ஒளி மற்றும் வெப்பநிலையின் வீழ்ச்சி பூமியின் மேல் வளிமண்டலத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதை ஆராய விண்வெளி நிறுவனம் நோக்கமாக கொண்டுள்ளது.
கிரகணப் பாதையைச் சுற்றியுள்ள வளிமண்டல இடையூறுகள் (APEP) ஒலிக்கும் ராக்கெட்டுகள். வர்ஜீனியாவில் உள்ள நாசாவின் வாலோப்ஸ் ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும். இந்த ராக்கெட்டுகள் சந்திரன் சூரியனைக் மறைக்கும் போது உருவாகும் அயனோஸ்பியரில் ஏற்படும் இடையூறு, பாதிப்புகளை ஆய்வு செய்வததை நோக்கமாக கொண்டுள்ளது.
3 சவுண்டிங் ராக்கெட்டுகள் வெவ்வேறு நேரங்களில் ஏவப்படும். முழு சூரிய கிரகண நிலை பொறுத்து,
45 நிமிடங்களுக்கு முன், கிரணத்தின் போது மற்றும் கிரணத்திற்குப் பின் என 3 நேரங்களில் ஏவப்படும்.
இவ்வாறு இடைவெளி விட்டு ஏவப்படுவது சூரியனின் திடீர் மறைவு அயனோஸ்பியரை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான தரவுகளை சேகரிக்க உதவும். அயனோஸ்பியர் பாதிப்பு நமது தொலைத் தொடர்புகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என கூறியுள்ளனர்.
அயனோஸ்பியர் என்பது பூமியின் வளிமண்டலத்தின் ஒரு பகுதியாகும். இது தரையில் இருந்து 55 முதல் 310 மைல்கள் (90 முதல் 500 கிலோ மீட்டர்) வரை உள்ளது. "இது ஒரு மின்மயமாக்கப்பட்ட பகுதி, இது ரேடியோ சிக்னல்களை பிரதிபலிக்கிறது, மேலும் சமிக்ஞைகள் கடந்து செல்லும்போது செயற்கைக் கோள் தகவல்தொடர்புகளையும் பாதிக்கிறது" என்று ஆய்வாளர் பர்ஜாத்யா கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“