Advertisment

ஒரே நட்சத்திரத்தை சுற்றி வரும் 7 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு: சூரியவை விட அதிக வெப்பமானவை

நாசாவின் ஓய்வு பெற்ற கெப்ளர் விண்வெளி தொலைநோக்கியின் தரவுகளை ஆய்வு செய்ததில், ஒரே நட்சத்திரத்தைச் சுற்றி வரும் 7 சூப்பர் ஹாட் எக்ஸோப்ளானெட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Kepler.jpg

விண்வெளியில் 7 புதிய கிரகங்கள் கொண்ட அமைப்பை நாசா கண்டுபிடித்துள்ளது. கெப்ளர் தொலைநோக்கி மூலம் நடத்தப்பட்ட ஆய்வில்  இந்த அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா கூறியுள்ளது. 

Advertisment

நாசாவின் கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி 2018-ல் பணியில் இருந்து ஓய்வு பெற்றது, ஆனால் அது சேகரித்த தரவு தொடர்ந்து அறிவியல் பொக்கிஷங்களை அளிக்கிறது. கெப்ளர் சேகரித்த தரவுகளை தொடர்ந்து ஆய்வு செய்து வரும் ஆராய்ச்சியாளர்கள் குழு, விண்வெளியில் 7 புதிய கிரகங்கள் கொண்ட அமைப்பு இருப்பதை கண்டறிந்துள்ளனர். ஒரு நட்சத்திரத்தை சுற்றி வரும் 7 வெப்பமான கிரகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

அவை ஒவ்வொன்றும் நமது சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்களை விட அதிக வெப்பமானவை.  
கெப்ளர்-385 எனப் பெயரிடப்பட்ட இந்த அமைப்பு  பூமியை விட பெரியது.நெப்டியூனை விட சிறியதாகும். 

நமது சூரிய மண்டலத்தில் இருப்பது போன்று  சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரம் உள்ளது. அந்த நட்சத்திரத்தை சுற்றி 7 கிரகங்கள் சுற்றி வருகின்றன. இது சூரியனை விட 10 சதவிகிதம் பெரிய அளவிலும், சூரியனை விட 5 சதவிகிதம் அதிக வெப்பமானவை என்றும் நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Nasa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment