இந்தாண்டு நீட் யு.ஜி எழுதும் மாணவர்களுக்கு என்.டி.ஏ தரப்பில் இருந்து முக்கிய அறிவிப்பு வெளியிட்டது. அது என்னவென்றால் ஆதார் உடன் APAAR ஐ.டி பற்றியும் ஒரு விஷயம் கூறியிருந்தனர். APAAR ஐ.டி உருவாக்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.
Advertisment
1. டிஜிலாக்கர் தளத்தில் APAAR ஐ.டி உருவாக்கலாம். இதற்கு டிஜிலாக்கர் சென்று சைன் இன்/அப் செய்து கொள்ளவும். 10 மார்க் சீட்டில் உங்கள் பெயர் உள்ளபடி சைன்அப் செய்யவும்.
2. அடுத்து ஆதாரில் பதியப்பட்ட மொபைல் எண், இமெயில் ஐ.டி, செக்யூடிட்டி பின் செட் செய்யவும். 3. அதன் பின் ஓ.டி.பி வரும் அதை கொடுக்கவும். 4. இப்போது உள் நுழைந்த பின் சர்ச் டாக்குமெண்ட்ஸ் கொடுக்கவும். APAAR என சர்ச் செய்யவும். 5. Academic bank of credits என வரும். அதை கிளிக் செய்த பின் APAAR ஐ.டி என வரும். அதையும் கிளிக் செய்யவும். 6. அதன் பின் ஆதாரில் உள்ளபடி பெயர் கொடுக்கவும். அடுத்து பிறந்த தேதி, மொபைல் எண், பாலினம் கொடுக்கவும். 7. அடுத்தாக, Identity Type இருக்கும். அதில் ஆப்ஷன்கள் வரும். அதில் உங்கள் ரோல் நம்பர், Registration Number, admission Number என எது வேண்டுமானாலும் கொடுக்கலாம். 8. I am student at என்ற இடத்தில் நீங்கள் தமிழ்நாடு போர்ட்டில் படித்தால் அதை கொடுக்கவும். சி.பி.எஸ்.சி என்றால் அதை கொடுக்கவும். 9. Identity Value என்ற இடத்தில் ரோல் நம்பர் கொடுக்கவும். அதன் பின் சப்மிட் கொடுத்து சர்ச் கொடுக்கவும். 10. அடுத்தாக உங்கள் APAAR ஐ.டி ஜெனரேட் ஆகி வந்து விடும்.
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news