பயனர்களுக்கு பிடித்தமான பரிந்துரைகளை வழங்கிட நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம், புதிதாக இரட்டை தம்ஸ் அப் பட்டனை அறிமுகம் செய்துள்ளது.வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களில் பயனர்கள் அதிகம் விரும்பும் தளமாக நெட்ஃபிளிக்ஸ் மாறியுள்ளது. இந்நிலையில், பயனர்கள் வீடியோ பார்க்கும் அனுபவத்தை மேலும் மேம்படுத்தும் வகையில், ‘Two Thumbs up' பட்டனை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தி இந்தியன் எகஸ்பிரஸ்ஸூடன் வீடியோ காலில் பேசிய அந்நிறுவனத்தின் தனிப்பயனாக்கலுக்கான இனோவேஷன் இயக்குநர் கிறிஸ்டின் டோய்க், "புதிய அம்சத்தை அறிமுகப்படுத்துகிறோம். இது பயனர்கள் விரும்பும் நிகழ்ச்சி அல்லது திரைப்படத்திற்கு 2 தம்ஸ் அப் கொடுக்க அனுமதிக்கிறது. இது எங்கள் பயனர்களுடனான உரையாடல் உத்தியின் ஒரு பகுதியாகும். இந்த அம்சம், அவர்களின் பரிந்துரைகளை மேம்படுத்த கூடுதல் உள்ளீட்டுகளை வழங்க அனுமதிக்கிறது" என்றார்.
மேலும் பேசிய அவர், பயனர்களிடமிருந்து நாங்கள் கேள்விப்பட்டவை என்னவென்றால், ஒரு நிகழ்ச்சியை லைக் செய்வதை காட்டிலும் ஒரு நிகழ்ச்சியை லவ் செய்வதில் வித்தியாசம் உள்ளது என்றனர். எனவே, இந்த புதிய அம்சம் அந்த வித்தியாசத்தை கண்டறிய எங்களுக்கு உதவியாக இருக்கும். பயனர்களின் கருத்தைக் கேட்டு, இந்த புதிய அனுபவத்தைச் சோதித்தோம்.
Netflix இன் அல்காரிதத்தில் Two Thumbs up' பட்டன் உள்ளீடாக செயல்படும், இது பயனர்களுக்கு நிகழ்ச்சிகளைப் பரிந்துரைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். ஒரு பயனர் எந்த வகையான உள்ளடக்கத்தைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறார் என்பதை இது சுட்டுக்காட்டுகிறது என்றார்.
பயனர்கள் எதைப் பார்க்க விரும்புகிறார்கள் என்பதை அறிந்து அவர்களுக்கான பரிந்துரையை கொடுத்திட பல்வேறு அம்சங்களைத் நெட்ஃபிளிக்ஸ் தொடர்ந்து சேர்த்து வருகிறது. இந்த ஆண்டு சேர்க்கப்பட்டுள்ள continue watching’ ஆப்ஷனிலிருந்து சில நிகழ்ச்சிகளை அகற்றும் வசதியும் அடங்கும்
ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், வெப் என அனைத்து வகையான தளங்களிலும் இந்த இரட்டை தம்ஸ்அப் பட்டன் வழங்கப்படவுள்ள
நெட்ஃபிளிக்ஸ் புதிய 2 தம்ஸ் அப் பட்டன், டிஸ்லைக் மற்றும் லைக் பட்டனுக்குப் பிறகு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil