நெட்ஃபிளிக்ஸ் இந்தியா விலைக் குறைப்பு: மற்ற ஸ்ட்ரீமிங் சேவைகளுடன் விரைவான ஒப்பீடு

Netflix in India gets a price cut comparison with other streaming services Tamil News ஏர்டெல் பயனர்கள் அமேசான் ப்ரைம் வீடியோக்களை SD தரத்தில் ஸ்ட்ரீம் செய்ய அனுமதிக்கிறது.

Netflix in India gets a price cut comparison with other streaming services Tamil News
Netflix in India gets a price cut comparison with other streaming services Tamil News

Netflix in India gets a price cut comparison with other streaming services Tamil News : நெட்ஃப்ளிக்ஸ், சமீபத்தில் இந்தியாவில் அதன் விலைகளைக் குறைத்துள்ளது. மேலும் பயனர்கள் தற்போதுள்ள திட்டத்தில் சிறிது பணத்தைச் சேமிக்கலாம் அல்லது உயர் திட்டத்திற்கு மேம்படுத்தலாம். அதன் புதிய விலைகளை இங்கே பார்க்கலாம். இதற்கிடையில், போட்டியாளரான OTT தளமான அமேசான் பிரைம் இந்தியாவில் இன்று முதல் அதன் விலையை உயர்த்தியுள்ளது. இந்தியாவில் இப்போது நீங்கள் சப்ஸ்க்ரைப் செய்யக்கூடிய அனைத்து முக்கிய OTT சேவைகளின் விலைகள் இங்கே உள்ளன.

நெட்ஃப்ளிக்ஸ்: இந்தியாவில் திட்டங்கள், விலைகள்

நெட்ஃப்ளிக்ஸ் இந்தியாவில் தற்போது நான்கு திட்டங்களைக் கொண்டுள்ளது. ஒரே ஒரு மொபைல்/டேப்லெட் சாதனத்திற்கான 480p ஸ்ட்ரீமிங்கை ஆதரிக்கும் நெட்ஃப்ளிக்ஸ் மொபைல் திட்டம், மாதத்திற்கு ரூ.149 செலவாகும். இதன் மொபைல் திட்டம், மொபைல் அல்லது டேப்லெட்களில் மட்டுமே சேவையை அணுக உங்களை அனுமதிக்கிறது. நீங்கள் ஒரு PC அல்லது டிவியில் இருந்து சேவையை அணுக முடியாது. பின்னர் நெட்ஃப்ளிக்ஸ் அடிப்படைத் திட்டம் உள்ளது. இது, ஒற்றைத் திரையில் (எந்த சாதனத்திற்கும்) 480p ஸ்ட்ரீமிங்கை ஆதரிக்கிறது மற்றும் மாதத்திற்கு ரூ.199 செலவாகும்.

நெட்ஃப்ளிக்ஸ் ஸ்டாண்டர்ட் திட்டத்திற்கு மாதம் ரூ.499 செலவாகும் மற்றும் இரண்டு சாதனங்களுக்கு 1080p ஸ்ட்ரீமிங்கை ஆதரிக்கிறது. இறுதியாக, நெட்ஃப்ளிக்ஸ் பிரீமியம் திட்டத்திற்கு மாதம் ரூ.649 செலவாகும் மற்றும் இது நான்கு சாதனங்களுக்கு 4K HDR ஸ்ட்ரீமிங்கை ஆதரிக்கிறது.

Amazon Prime வீடியோ: இந்தியாவில் விலை

நெட்ஃப்ளிக்ஸ் போலல்லாமல், அமேசான் ப்ரைம் சமீபத்தில் அதன் சந்தா திட்டங்களின் விலையை அதிகரித்தது. இந்த மாற்றத்தின் விளைவாக, இன்று முதல் தொடங்கும் வருடாந்திர பிரைம் உறுப்பினர் திட்டத்திற்குப் பயனர்கள் ரூ.1,499 செலுத்த வேண்டும்.

அமேசான் பிரைமில் தற்போது ரூ.129 விலையுள்ள மாதாந்திரத் திட்டம் ரூ.50 அதிகரித்து, இப்போது ரூ.179-ஆக இருக்கும். நிச்சயமாக அமேசான் பிரைம் மூலம், அமேசான் பிரைம் வீடியோவைக் காட்டிலும் அதிகமான அணுகலைப் பெறுவீர்கள். அமேசான், அமேசான் மியூசிக் அணுகல் போன்றவற்றிலும் வாடிக்கையாளர்கள் விரைவான டெலிவரியைப் பெறுவீர்கள்.

இதற்கிடையில், அமேசான் பிரைம் வீடியோ மொபைல்-மட்டும் திட்டம் உள்ளது. இது ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இது ஒற்றைப் பயனர் மற்றும் மொபைல்-மட்டும் திட்டமாகும். இது, ஏர்டெல் பயனர்கள் அமேசான் ப்ரைம் வீடியோக்களை SD தரத்தில் ஸ்ட்ரீம் செய்ய அனுமதிக்கிறது. ப்ரீபெய்ட் திட்டங்களில் உள்ள அனைத்து ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கும் இந்தத் திட்டம் வழங்கப்படுகிறது. மேலும், 30 நாள் இலவச சோதனையுடன் வருகிறது.

டிஸ்னி + ஹாட்ஸ்டார்: இந்தியாவில் விலைகள், திட்டங்கள்

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மூன்று திட்டங்களில் கிடைக்கிறது. ஆண்டுக்கு ரூ.499 செலவாகும் மொபைல்-மட்டும் திட்டம் இதில் அடங்கும் மற்றும் ஸ்டீரியோ ஆடியோவுடன் 720p ஸ்ட்ரீமிங் கொண்ட மொபைல் சாதனங்களை மட்டுமே இது ஆதரிக்கிறது.

1080p ஸ்ட்ரீமிங் மற்றும் டால்பி 5.1 ஆடியோவுடன் இரண்டு சாதனங்களை ஆதரிக்கும் ரூ.899 விலையில் ஒரு சூப்பர் திட்டமும் உள்ளது. இறுதியாக, பிரீமியம் திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.1,499 செலவாகும் மற்றும் 4K ஸ்ட்ரீமிங் மற்றும் டால்பி 5.1 ஆடியோ கொண்ட நான்கு சாதனங்களை ஆதரிக்கிறது.

Sony Liv: இந்தியாவில் விலைகள், திட்டங்கள்

சோனி லிவ் இந்தியாவில் பல திட்டங்களில் வருகிறது. இது கால அளவை மட்டுமல்ல, நீங்கள் பார்க்க விரும்பும் உள்ளடக்கத்தையும் பொறுத்தது. ரூ.399 Liv ஸ்பெஷல்+ திட்டமானது, ‘விளம்பரங்களுடன்’ என்ற மாறுபாட்டைத் தேர்வுசெய்தால் அதன் விலை ரூ.199 ஆகும். 12 மாதங்களுக்கு ரூ.299 செலவாகும் WWE நெட்வொர்க் திட்டம் உள்ளது. Liv பிரீமியம் திட்டமானது 12 மாதங்களுக்கு ரூ.999, 6 மாதங்களுக்கு ரூ.699 மற்றும் 1 மாதத்திற்கு ரூ.299 உள்ளிட்ட சேவைகள் உள்ளன.

Zee5: இந்தியாவில் திட்டங்கள், விலைகள்

பயனர்கள் இரண்டு Zee5 பிரீமியம் திட்டங்களுக்கு இடையே தேர்வு செய்யலாம். இதில் மூன்று திரைகளை ஆதரிக்கும் 12 மாத திட்டமும், இரண்டு திரைகளை ஆதரிக்கும் 3 மாத ரூ.299 திட்டமும் அடங்கும்.

வூட் செலெக்ட் : இந்தியாவில் திட்டங்கள், விலைகள்

Voot Select-ஆனது 12 மாதங்களுக்கு நீடிக்கும் மற்றும் பயன்பாட்டில் உள்ள அனைத்து பிரீமியம் உள்ளடக்கத்தையும் உள்ளடக்கிய ரூ.299 திட்டத்தில் கிடைக்கிறது.

AltBalaji: இந்தியாவில் திட்டங்கள், விலைகள்

AltBalaji மூன்று சந்தா திட்டங்களில் கிடைக்கிறது. இதில் 2 மாத ரூ.100 திட்டமும், 6 மாத ரூ.199 திட்டமும், 12 மாத ரூ.300 திட்டமும் அடங்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Netflix in india gets a price cut comparison with other streaming services tamil news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express