Advertisment

Netflix பாஸ்வேர்ட் ஷேர் செய்வீங்களா? அப்போ இனி கூடுதல் கட்டணம்!

அடுத்தவரின் நெட்ஃபிளிக்ஸ் கணக்கை பயன்படுத்தி வந்த நபர்களுக்கான செய்தி தான் இது. விரைவில், Netflix கணக்கை ஷேர் செய்யும் அம்சத்திற்கு கட்டணம் வசூலிக்க நேரிடலாம்.

author-image
WebDesk
New Update
சரிவை சந்தித்த நெட்ஃபிலிக்ஸ்.. இனி இந்த வசதிகள் கிடையாது!

உலகெங்கிலும் பலர் நெட்ஃபிளிக்ஸ் பயனர்களாக உள்ளனர். ஆனால் அவர்களில் பாதி பேர் வேறொருவரின் நெட்ஃபிளிக்ஸ் சந்தாவையே பயன்படுத்துகின்றனர்.

Advertisment

நெட்ஃபிளிக்ஸ் பாஸ்வேர்ட் ஷேரிங் பொதுவானது என்றாலும், ஒரு வீட்டில் பல சாதனங்களில் பயன்படுத்துவது மட்டுமல்லாமல் நண்பர்கள், உறவினர்கள் என பலருக்கு அளிக்கப்படுகிறது. இதனை கவனித்த நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம், பல மாதங்களாக கெடுபிடிகளை விதிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது.

அதன்படி, நெட்ஃபிளிக்ஸ் பார்வேர்டை சொந்த சாதனங்கள் அல்லாமல் நண்பர்களுக்கு பகிர்வதற்கு கட்டணத்தை வசூலிக்கும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

இந்த புதிய திட்டத்தை, சிலி, கோஸ்டாரிகா, பெரு ஆகிய பகுதிகளில் முதலில் அறிமுகப்படுத்தியுள்ளது. இவை விரைவில் அனைத்து நாடுகளுக்கும் வரும் என நெட்ஃபிளிக்ஸ் வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும், பிற்காலத்தில் இந்த அம்சம் மற்ற எல்லாப் பகுதிகளுக்கும் வரக்கூடும்.

இதுதொடர்பாக நெட்ஃபிளிக்ஸ் வெளியிட்ட பதிவில், எங்கள் நெட்ஃபிளிக்ஸ் சந்தா திட்ட வாடிக்கையாளர்கள், தங்கள் குடும்பத்திற்குள் கணக்கை பயன்படுத்தும் வகையில், தனித்தனி புரோபைல் மற்றும் பல ஸ்ட்ரீம்கள் போன்ற அம்சங்களை வழங்கி எளிதாக்கியுள்ளோம். ஆனால், சிலர் Netflix ஐ எப்போது, ​​எப்படி பகிரலாம் என்பதில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். அதன் விளைவாக, வீட்டை தாண்டி பலருக்கு நெட்ஃபிளிக்ஸ் கணக்கு ஷெர் செய்யப்படுகிறது. இது, புதிய டிவி மற்றும் தொலைகாட்சிகளில் விநியோகம் செய்யும் எங்கள் வணிக திறனை பாதிக்கிறது என தெரிவித்திருந்தார்.

புதிய மாற்றம் என்ன?

நெட்ஃபிளிக்ஸ் புதிதாக ‘Add Extra Member’ and ‘Transfer Profile to New Account’ என்கிற இரண்டு ஆப்ஷன்களை இணைத்துள்ளது.

‘Add Extra Member’: இந்த வசதியை பயன்படுத்தி ஸ்டாண்டர்ட் மற்றும் பிரீமியம் நெட்ஃபிளிக்ஸ் திட்டங்களின் உறுப்பினர்கள் ஒரே வீட்டில் இருக்கும் உறுப்பினர்கள் தவிர இரண்டு நபர்களின் கணக்குகளை துணைக் கணக்குகளாக சேர்த்துக்கொள்ளலாம்.ஒவ்வொருவருக்கும் தனி புரோபைல், மூவிஸ் பரிந்துரைகள் ஷாட்லிஸ்ட் வசதி கொடுக்கப்படும்.

இந்த துணை கணக்குகள் லாகின் செய்திட ஐடி அண்ட் பாஸ்வேர்டு வழங்கப்படும். இந்த வசதியை அணுக குறைவான கட்டணமே வசூலிக்கப்படுகிறது. சிலி நாட்டில் 2,380 CLP, கோஸ்டா ரிகாவில் $2.99, பெருவில் 7.9 PEN வசூலிக்கப்படுகிறது. ​​(குறிப்பு இந்திய மதிப்பில், அதன் கட்டணம் தோரயமாக 225 ரூபாய் ஆகும்)

Transfer Profile to a New Account: இந்த வசதியானது, பேசிக், ஸ்டாண்டர்ட் மற்றும் பிரீமியம் திட்ட உறுப்பினர்கள், புதிய கணக்குகளுக்கோ அல்லது கூடுதலான துணை கணக்கிற்கோ தங்களது ப்ரோபைல் தகவல்களை ஷெர் செய்திட முடியும். இதன் மூலம், அந்நபர் உங்கள் வீடியோ ஹிஸ்டரி, மை லிஸ்ட், ஷாட்ஸிஸ்ட் பரிந்துரைகளை காணமுடியும்.

அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி+ ஹாட்ஸ்டார், சோனி லிவ் என போட்டி நிறைந்த உலகில், தனது அடையாளத்தை நிலையாக பதிக்க சந்தா கட்டண குறைப்பை அண்மையில் நெட்ஃபிளிக்ஸ் அறிமுகப்படுத்தியது. தற்போதைய மாற்றம் மூலம், நீங்களும் உங்கள் நண்பர்களும் ஒரே கணக்கைப் பயன்படுத்த விரைவில் கட்டணம் செலுத்த நேரிடும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Netflix India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment