/tamil-ie/media/media_files/uploads/2020/09/template-2020-09-07T132016.311.jpg)
Netflix News In Tamil: சர்வதேச அளவில் அதிகளவிலான ஓடிடி சப்ஸ்கிரபர்களை தன்னகத்தே கொண்டிருப்பது நெட்பிளிக்ஸ் தான். டிஸ்னி ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் வீடியோ உள்ளிட்டவைகளை ஒப்பிடும்போது, நெட்பிளிக்சில் கட்டணம் அதிகம் தான் என்றாலும், அதில் உள்ள வசதிகள் பன்மடங்கு ஆகும்.
இந்நிலையில், நெட்பிளிக்ஸ், சில திரைப்படங்கள் மற்றும் முன்னணி டிவி ஷோக்களின் முதல் பாகங்களை இலவசமாக பார்க்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
உங்கள் பிரவுசரில் https://www.netflix.com/in/watch-free என்று டைப் செய்வதன் மூலம் இலவசமாக பார்க்கும் வசதியை பெறலாம்.
இந்த வசதி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், டெக்ஸ்டாப்கள் உள்ளிட்டவைகளில் மட்டுமே கிடைக்கும். iOS அடிப்படையிலான ஐபோன்கள், ஐபேட்களில் இந்த வசதியை பெற முடியாது. ஸ்மார்ட் டிவிக்களில் இந்த வசதியை பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Stranger things போன்ற முன்னணி டிவி ஷோக்களின் முதல் பாகங்களை நெட்பிளிக்ஸ் பயனாளர்கள் தற்போது இலவசமாக காண வழிவகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Grace and Frankie, Murder Mystery, Love is Blind, The Two Popes, Bird Box, When they see ss, The Boss Baby Back in Business, Our Planet and Elite உள்ளிட்ட நிகழ்ச்சிகளையும் அவர்கள் இலவசமாக கண்டுகளிக்கலாம்.
இந்தியாவில், தற்போதைய அளவில் நெட்பிளிக்ஸ் 4 திட்டங்களை தங்களது பயனாளர்களுக்கு வழங்கி வருகிறது.
ரூ. 199 திட்டத்தில், நிகழ்ச்சிகளை ஸ்மார்ட் போன்களில் மட்டுமே பார்க்க முடியும்.
ரூ. 499 திட்டத்தில் SD மற்றும் HD தரத்திலான நிகழ்ச்சிகளை டேப்லெட், ஸ்மார்ட்போன், ஸமார்ட் டிவி அல்லது கம்ப்யூட்டர் இவைகளில் ஏதாவது ஒன்றில் தான் பார்க்க முடியும்.
ரூ.649 திட்டத்தில் 2 டிவைஸ்களிலும்
ரூ.799 திட்டத்தில், ஒரேநேரத்தில் 4 டிவைஸ்களிலும் நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.