நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் பாஸ்வேர்ட் ஷேரிங் வசதிக்கு கடுமையான கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. குடும்பத்தில் ஒருவர் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற அடிப்படையில் விதிகளை திருத்தியுள்ளது. நெட்ஃபிலிக்ஸ் கணக்கிற்கான பாஸ்வேர்ட் ஷேரிங் உலகளவில் நிறுவனத்தின் வருவாயை கடுமையாக பாதித்தது. இந்நிலையில் வருவாய், பயனர்களை அதிகரிக்க பாஸ்வேர்ட் ஷேரிங் அம்சத்தில் கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது.
புதிய பாலிசி என்ன?
நெட்ஃபிலிக்ஸ்-ன் புதிய கொள்கையானது ஒரு கணக்கை ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதை தெளிவுபடுத்துகிறது. ஒன்றாக வாழும் குடும்ப உறுப்பினர்கள் வீட்டில் இருந்தாலும், விடுமுறையில் இருந்தாலும் அல்லது பயணத்தில் இருந்தாலும், பல்வேறு சாதனங்களில் நெட்ஃபிலிக்ஸ் கணக்கை பயன்படுத்த முடியும் என்பதே இதன் பொருள். குடும்ப உறுப்பினர்கள் கணக்கை பகிர்ந்து கொள்ள "Transfer Profile" and "Manage Access and Devices" போன்ற அம்சங்களை வழங்குகிறது.
முன்னதாக, இந்தியாவில் உள்ள பல பயனர்கள் தங்கள் நெட்ஃபிலிக்ஸ் கணக்கை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டனர். இருவர் சேர்ந்து பணம் பகிர்ந்து கணக்கைப் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் புதிய நடவடிக்கைகள் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கிறது.
பாஸ்வேர்ட் ஷேரிங்கை நெட்ஃபிலிக்ஸ் எவ்வாறு அடையாளம் காணும்?
பாஸ்வேர்ட் ஷேரிங்கை அடையாளம் காண நெட்ஃபிலிக்ஸ் மேம்பட்ட முறைகளைப் பயன்படுத்துகிறது. நெட்ஃபிலிக்ஸ் லாக் கின் செய்யப்பட்ட பயனரின் ஐ.பி முகவரி, டிவைஸ் ஐ.டி ஆகியவற்றை டிராக் செய்கிறது. அவ்வாறு செய்வதன் மூலம், முதன்மை பயனர்கள் அல்லாதவர்கள் நெட்ஃபிலிக்ஸ் கணக்கை பயன்படுத்த முடியாது.
பயனர்கள் புதிய கொள்கைக்கு இணங்குவதை உறுதிசெய்ய, நெட்ஃபிலிக்ஸ் பயனர்கள் முதன்மைக் குடும்பத்திற்கு வெளியே இருந்து கணக்கை அணுக அணுகல் குறியீடுகளை உள்ளிட வேண்டும். இந்தக் குறியீடுகள் ஏழு நாட்கள் வரை செல்லுபடியாகும். கூடுதலாக, பயனர்கள் 31 நாட்களுக்கு ஒரு முறையாவது முதன்மைக் குடும்பத்தின் வைஃபையுடன் இணைக்க வேண்டும்.
கூடுதல் பணம் செலுத்தி பாஸ்வேர்ட் ஷேரிங் செய்யலாமா?
நெட்ஃபிலிக்ஸ் அமெரிக்கா போன்ற நாடுகளில் கூடுதல் பணம் செலுத்தி பாஸ்வேர்ட் ஷேர் செய்யும் வசதியை அனுமதிக்கிறது. ஆனால் இந்தியாவில், சந்தா கட்டணம் குறைவாக உள்ளதால் இந்த ஆப்ஷனை வழங்க வேண்டாம் என நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நெட்ஃபிலிக்ஸ் அதிகபட்சமாக பிரீமியம் திட்டமாக மாதம் ரூ.649 செலுத்தும் திட்டத்தை கொண்டுள்ளது. இதில் 4 சாதனங்களை இணைக்கலாம், 4K தரத்தில் வீடியோ பார்க்கலாம். இது நெட்ஃபிலிக்ஸ் இந்தியாவில் வழங்கும் விலையுயர்ந்த ஸ்ட்ரீமிங் திட்டமாகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.