மாத சந்தாவை அதிரடியாக குறைத்த நெட்ஃப்ளிக்ஸ்… புதிய ரேட் தெரியுமா?

நெட்பிளிக்ஸ் தனது சந்தா விலையை குறைத்துள்ள நிலையில், அதன் போட்டியாளரான அமேசான் பிரைம் தனது சேவைக்கான விலையை அதிகரித்துள்ளது

உலகின் மிக பெரிய வீடியோ ஸ்ட்ரீமிங் நிறுவனமானநெட்ஃப்ளிக்ஸில், தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஹாலிவுட், கொரிய என பல மொழி திரைப்படங்கள், வெப் சீரியஸ்கள் ஆகியவற்றை கண்டுகளிக்க முடியும்.

ஓடிடியில் பல திரைப்படங்கள் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றுள்ள நிலையில், வாடிக்கையாளர்களை கவர நெட்பிளிக்ஸ் தனது மாத சந்தாக்களின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது.

இந்த விலை மாற்றம் இன்று (டிசம்பர் 14) முதல் அமலுக்கு வருகிறது. இந்தப் புதிய கட்டணம் பயனாளர்கள் அடுத்து செய்யும் ரீச்சார்ஜ் லிருந்து நடைமுறைக்கு வரும். புதிதாக நெட்ஃப்ளிக்ஸ் இணையும் நபர்கள், புதிய கட்டணங்களின் கீழ் எளிதாக இணைந்துகொள்ளலாம்.

மொபைல், பேசிக், ஸ்டேன்டேட் என மூன்று வகையான திட்டங்களை நெட்ஃப்ளிக்ஸ் கொண்டுள்ளது. தற்போது, அதே விலையில் வேறு அடுத்த திட்டங்களுக்கு மாறுவதற்கான வாய்ப்பை நெட்பிளிகஸ் வழங்கியுள்ளது. மொபைல் வேர்ஷன் பயன்படுத்தி வந்த நபர்கள், தற்போது பேசிக் வெர்ஷன் 199 ரூபாய் என்பதால் ஈஸியாக அப்கிரேட் செய்துகொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பான பயனாளர்களின் செல்போனுக்கு நோட்டிபிகேஷன் அனுப்ப திட்டமிட்டுள்ளது. பயனாளர்கள் அப்கிரேட் செய்ய விரும்புகிறீர்களா அல்லது வேறு திட்டத்தில் இணைய விரும்புகிறீர்களா போன்றவை இடம்பெறும் என கூறப்படுகிறது.

நெட்ஃப்ளிக்ஸ் மொபைல் திட்டம் இப்போது மாதத்திற்கு ரூ.149 இல் தொடங்குகிறது.இத்திட்டத்தில் பயனாளர்கள் 480p தெளிவுத்திறனில் காட்சியை செல்போன் அல்லது டேப்லட்டில் காணலாம். இதனை டிவி அல்லது லேப்டாப்பில் கனெக்ட் செய்ய இயலாது.அதே போல், இந்த கணக்கை ஒரு சாதனத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும்

பேசிக் திட்டம் தற்போது மாதத்திற்கு ரூ. 199க்கு கிடைக்கிறது. 480p தெளிவுத்திறன் தான் கிடைத்தாலும், இந்த கணக்கை சிஸ்டமிலும் கனெக்ட் செய்யலாம். இதிலும், ஒரு சாதனத்தில் ஒரு நேரம் மட்டுமே பயன்படுத்த முடியும்.

ஸ்டேன்டேட் திட்டம், தற்போது மாதத்திற்கு ரூ. 499க்கு கிடைக்கிறது. 1080pதெளிவுத்திறனுடன் காட்சியை இரண்டு சாதனங்களில் காணலாம். இந்த கணக்கை மொபைல், கணினி,லேப்டாப் என அனைத்திலும் கனெக்ட் செய்யலாம்.

ஹெச்.டி குவாலிட்டியில் பிரீமியம் நெட்ஃப்ளிக்ஸ் கணக்கு, தற்போது மாதம் ரூ.649க்கு கிடைக்கிறது. 4K தெளிவுத்திறன் மற்றும் ஒரே நேரத்தில் நான்கு சாதனங்களில் பார்க்கும் வசதி உள்ளது.மொபைல், டேப்லெட், கணினி மற்றும் டிவி ஆகிய நான்கு சாதனங்களிலும் ஒரே நேரத்தில் உபயோகிக்கலாம்.

நெட்ஃப்ளிக்ஸ் தனது சந்தா விலையை குறைத்துள்ள நிலையில், அதன் போட்டியாளரான அமேசான் பிரைம் தனது சேவைக்கான விலையை அதிகரித்துள்ளது. அமேசான் பிரைம் ஆண்டிற்கு தற்போது ரூ.1499ஆக உள்ளது. முன்பு, வெறும் ரூ.999க்கு சந்தா பெறமுடிந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Netflix plans in india get price cut here are the details

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com