நெட்ஃபிலிக்ஸ் (Netflix) நிறுவனம் சர்வதேச அளவில் ஓ.டி.டி துறையில் முன்னணி வகிக்கிறது. உலகெங்கும் நெட்ஃபிலிக்ஸ் ஓ.டி.டி தளம் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் வருவாயை அதிகரிக்க விளம்பரத்துடன் கூடிய திட்டங்களை அறிமுகப்படுத்தப்படுவதாக கடந்தாண்டு நிறுவனம் தெரிவித்தது.
அதன்படி, நெட்ஃபிலிக்ஸ் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் குறைந்த விலையில் கிடைக்கும் அடிப்படை சந்தா திட்டத்தை நீக்கியுள்ளது. இதன் மூலம் விளம்பரங்களை ஆதரிக்கும் திட்டத்திற்கு மாற பயனர்களை கூறுகிறது.
9.99 டாலர் என்ற விலையில் வழங்கப்பட்டு வந்த அடிப்படைத் திட்டத்தை நிறுவனம் நீக்கியுள்ளது. இந்த திட்டத்தை பயன்படுத்தும் பயனர்கள் மீண்டும் இந்த திட்டத்தை புதுப்பிக்க முடியாது. புதிய பயனர்கள் இந்த திட்டத்தில் சேர முடியாது.
கடந்தாண்டு இது குறித்து கூறிய நிலையில் தற்போது நிறுவனம் இதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளது. ஓ.டி.டி தளங்களிடையே போட்டி அதிகரித்துள்ளதால் நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் கடந்தாண்டு நவம்பரில் ஹாட் ஸ்டார் போன்று விளம்பரத் திட்டங்களை ஆதரிப்பதாக கூறியது. பயனர்களின் வரவேற்பை பொறுத்து படிப்படியாக மற்ற நாடுகளிலும் திட்டம் கொண்டுவரப்பட உள்ளது.
எனினும் இந்தியாவில் இந்த திட்டம் கொண்டு வரப்படுமா? எப்போது செயல்படுத்தப்படும் என்ற தகவல் தற்போது வெளியாக வில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“