/tamil-ie/media/media_files/uploads/2020/12/Netflix_BLOOMBERG.jpg)
Netflix Streamfest How to watch netflix movies tv shows free
Watch Netflix for Free Tamil News : டிசம்பர் 5 முதல் டிசம்பர் 6 வரை நெட்ஃப்ளிக்ஸ் இலவசமாகப் பார்க்கப் பலருக்கு ஸ்ட்ரீமிங் சேவை கொடுத்ததை அடுத்து, டிசம்பர் 9 காலை 9 மணி முதல் டிசம்பர் 11 வெள்ளிக்கிழமை காலை 8:59 மணி வரை நெட்ஃப்ளிக்ஸ் ஸ்ட்ரீம்ஃபெஸ்ட்டை இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கவுள்ளது. இந்த அறிய வாய்ப்பினை மிஸ் பண்ணிடாதீர்கள் மக்களே!
ஸ்ட்ரீமிங் சேவையை சப்ஸ்க்ரைப் செய்யாமல் அல்லது ஆரம்ப நாட்களுக்குப் பிறகு அன்சப்ஸ்க்ரைப் செய்த பார்வையாளர்களுக்கு தங்கள் உள்ளடக்கத்தை வழங்க நெட்ஃப்ளிக்ஸ் மேற்கொண்ட முயற்சிதான் இது. ஸ்ட்ரீம்ஃபெஸ்ட்டின் போது, பயனர்கள் உள்ளடக்கத்தை நிலையான வரையறையில் (எஸ்டி) ஸ்ட்ரீம் செய்ய முடியும். உங்கள் டெஸ்க்டாப் அல்லது மடிக்கணினியில் நெட்ஃப்ளிக்ஸ் அணுக முயல்கிறீர்கள் என்றால், உங்கள் வெப் ப்ரவுஸரில் “www.netflix.com/in/streamfest” எனத் தட்டச்சு செய்து அணுகலாம். உங்கள் ஆண்ட்ராய்டு, iOS சாதனங்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகளிலும் இதேபோன்று அணுகலாம்.
நெட்ஃப்ளிக்ஸ் தற்போது இந்தியாவில் நான்கு திட்டங்களுக்குப் பதிவு செய்யலாம். அதில் மொபைல் திட்டம் மிகவும் மலிவானது. இது, எஸ்டி தரத்தை மாதத்திற்கு ரூ.199-க்கு வழங்குகிறது. பட்டியலில் உள்ள அடுத்த திட்டம் அடிப்படை நெட்ஃப்ளிக்ஸ் திட்டம். இது எஸ்டி மற்றும் எச்டி தரம் இரண்டிலும் உள்ளடக்கத்தை வழங்குகிறது. நீங்கள் அதை வெவ்வேறு சாதனங்களில் கூட பயன்படுத்தலாம். ஆனால், ஒரே நேரத்தில் ஒரு திரை மட்டுமே பயன்படுத்த முடியும். ரூ.649 திட்டம் ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களில் ஸ்ட்ரீமிங்கை வழங்குகிறது. அதே நேரத்தில் ரூ.799 பிரீமியம் திட்டம் ஒரே நேரத்தில் நான்கு திரைகளை உள்ளடக்கியது.
டிஸ்னி + ஹாட்ஸ்டார், அமேசான் ப்ரைம் வீடியோ, சோனிலிவ் மற்றும் பிற முக்கிய ஸ்ட்ரீமிங் சேவைகளுடன் நெட்ஃப்ளிக்ஸ் போட்டியிடுவதால் நீட்டிக்கப்பட்ட ஸ்ட்ரீம்ஃபெஸ்ட், சந்தாக்களின் அதிகரிப்புக்கு வழிவகுக்கிறதா என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும். மேலும், நீங்கள் நெட்ஃப்ளிக்ஸில் ஒரு குறிப்பிட்ட திரைப்படம் அல்லது தொடரைப் பார்க்க நீண்ட காலமாகக் காத்திருந்தால், அதனை இலவசமாகப் பார்க்க இது இரண்டாவது வாய்ப்பு.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.