நெட்ஃபிலிக்ஸ் விண்டோஸ் 11 மற்றும் விண்டோஸ் 10 ஆப்-ஐ மாற்றி இதை ஒரு வெப் ஆப்பாக களமிறக்க உள்ளது. புதிதாக அறிமுகம் செய்யும் Windows ஆப்ஸ் வீடியோ ஸ்ட்ரீமிங் தரத்தை மேம்படுத்தி, நேரடி நிகழ்வுகளுக்கான அணுகலை வழங்கும் அதே வேளையில், ஆஃப்லைன் டவுன்லோடு வசதியை நீக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
எனினும் தற்போது உள்ள Windows 10 மற்றும் Windows 11 ஆப்-ல் பயனர்கள் தங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகளை 1080p (FullHD) வரை டவுன்லோடு செய்ய முடியும்.
ஆனால் தற்போது அறிமுகம் செய்யப்படும் வெப் ஆப்-ல் இந்த டவுன்லோடு வசதி இருக்காது. இருப்பினும் மொபைல் வெர்ஷனில் டவுன்லோடு அம்சம் அப்படியே தொடரும். கணினி, லேப்டாப்-ல் மட்டும் இந்த வசதி-ஐ நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் நீக்க முடிவு செய்துள்ளாக கூறப்படுகிறது. மொபைல், டேப்லெட்-ல் இந்த வசதி தொடரும். நெட்ஃபிலிக்ஸ் விண்டோஸ் வெர்ஷனில் இந்த புதிய அப்டேட் அடுத்த மாதம் முதல் தொடங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“