/indian-express-tamil/media/media_files/skLuYWX1vG3HGPtYV0cR.jpg)
பிரபல வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான நெட்ஃபிலிக்ஸ் iOS 16 மற்றும் iPadOS 16-ல் இயங்கும் பழைய ஐபோன்கள் மற்றும் ஐபேட்களுக்கான ஆதரவை விரைவில் நிறுத்துவதாக அறிவித்தது.
ஆப்பிள் டிவைஸ் பயன்படுத்தும் பயனர்களுக்கு இதுகுறித்து முன்கூட்டியே மெசேஜ் அனுப்பி உள்ளது. மேலும் பழைய ஐபோன், ஐபேட் பயன்படுத்தும் நபர்கள் சமீபத்திய நெட்பிலிக்ஸ் வெர்ஷனுக்கு அப்பேட் செய்யும்படியும் கூறியுள்ளது. iOS17-க்கு புதுப்பிக்கவும் என்று கூறப்பட்டுள்ளது.
எந்தெந்த ஐபோன்களில் நெட்ஃபிலிக்ஸ் இனி இயங்காது?
Hardware வரம்புகள் காரணமாக சில சாதனங்களில் iOS 17 புதுப்பிப்பைப் பெற முடியாது என்று ஆப்பிள் முன்பு கூறியது. அதன்படி iOS 16-ல் இயங்கும் சாதனங்களின் பட்டியலில் iPhone 8, iPhone 8 Plus, iPhone X, iPad 5th Gen மற்றும் iPad Pro 1st Gen ஆகியவை உள்ளன.
விரைவில் இந்த ஐபோன், ஐபேட்களில் நெட்ஃபிலிக்ஸ் செயல்பாடு நிறுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.