இன்ஸ்டாகிராமில் சுவாரசியமான ரீல்ஸ் மிஸ் பண்ணிட்டீங்களா.. நோ ப்ராப்ளம்; வந்துவிட்டது 'வாட்ச் ஹிஸ்டரி' அம்சம்!

இன்ஸ்டாகிராம் சமீபத்தில் "வாட்ச் ஹிஸ்டரி" என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பயனர்கள் சமீபத்தில் பார்த்து, தவறிவிட்ட அல்லது மறந்த ரீல்களை எளிதாகக் கண்டறிய உதவுகிறது.

இன்ஸ்டாகிராம் சமீபத்தில் "வாட்ச் ஹிஸ்டரி" என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பயனர்கள் சமீபத்தில் பார்த்து, தவறிவிட்ட அல்லது மறந்த ரீல்களை எளிதாகக் கண்டறிய உதவுகிறது.

author-image
Meenakshi Sundaram S
New Update
Instagram Watch History Feature

இன்ஸ்டாகிராமில் சுவாரசியமான ரீல்ஸ்-ஐ மிஸ் பண்ணிட்டீங்களா.. நோ ப்ராப்ளம்; வந்துவிட்டது 'வாட்ச் ஹிஸ்டரி' அம்சம்!

இன்ஸ்டாகிராம் ரீல்ஸைப் பார்ப்பதில் நீங்க தீவிரமானவரா? ஒரு ரீலைப் பார்த்து ரசித்துவிட்டு, பிறகு எங்கே பார்த்தோம் என்று தேடித் தேடிக் களைத்துப்போன அனுபவம் உங்களுக்கு உண்டா? அப்படியானால், இது உங்களுக்கான குட்நியூஸ். இன்ஸ்டாகிராம் தனது பயனர்களின் நீண்ட நாள் தேவையறிந்து ஒரு அசத்தலான புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுதான் "வாட்ச் ஹிஸ்டரி" (Watch History) அம்சம்.

Advertisment

இந்த புதிய வசதியின் மூலம், நீங்க சமீபத்தில் பார்த்த அனைத்து ரீல்களும் ஒரு இடத்தில் தானாகவே சேமிக்கப்படும். இனிமேல், பிடித்த வீடியோக்களைத் தவறவிட்டோமே என்று கவலைப்படத் தேவையில்லை. நீங்க காணாமல் போனதாக நினைத்த ரீல்களைக்கூட இந்த ஹிஸ்ட்ரி பட்டியலிலிருந்து எளிதாக மீட்டெடுக்கலாம். இன்ஸ்டாகிராமில் மணிக்கணக்கில் ரீல்ஸ் பார்க்கும் பயனர்களுக்கு இந்த அம்சம் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

வாட்ச் ஹிஸ்டரியின் முக்கிய நன்மைகள்!

நீங்க பார்த்த அனைத்து ரீல்களும் ஒரே லிஸ்டில் இருப்பதால், தேடவேண்டிய அவசியமே இல்லை. முன்பு தவறிய வீடியோக்களை கண்ணிமைக்கும் நேரத்தில் மீண்டும் பார்க்கலாம். ஒரு ரீலைத் தேடி மீண்டும் மீண்டும் ஸ்க்ரோல் செய்து நேரத்தை வீணடிக்க வேண்டாம். இந்த லிஸ்டில் உங்க நேரத்தை மிச்சப்படுத்தி, நீங்க விரும்பிய வீடியோக்களை உடனடியாக அனுபவிக்க உதவுகிறது. இந்த அம்சத்தை அணுகுவது மிகவும் எளிதானது.

எப்படி இந்த ‘வாட்ச் ஹிஸ்டரி’யை பார்ப்பது? 

நீங்க சமீபத்தில் பார்த்த ரீல்களின் பட்டியலைக் காண, இந்த எளிய ஸ்டெப்ஸ்களை பின்பற்றவும்

Advertisment
Advertisements

உங்க இன்ஸ்டாகிராம் ப்ரோஃபைல் (Profile) பக்கத்தைத் திறக்கவும்.

மேல் வலது மூலையில் உள்ள 3 கோடுகளைத் (Menu) தொட்டு, 'செட்டிங்ஸ் மற்றும் தனியுரிமை' பகுதிக்குச் செல்லவும்.

அங்குள்ள "உங்கள் செயல்பாடு" (Your Activity) விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

இப்போது, உள்ளே இருக்கும் "வாட்ச் ஹிஸ்டரி" (Watch History) என்ற புதிய விருப்பத்திற்குச் செல்லவும்.

அவ்வளவுதான். நீங்க சமீபத்தில் பார்த்த அனைத்து ரீல்களின் பட்டியலையும் அங்கு பார்க்கலாம். இதில் இருந்து எந்த ரீலையும் மீண்டும் எளிதாகப் பார்த்து ரசிக்கலாம். இன்ஸ்டாகிராமின் இந்த புதிய அம்சம், ரீல்ஸ் பார்ப்பதை இன்னும் சுலபமாகவும், வசதியாகவும், தொந்தரவில்லாமலும் மாற்றியுள்ளது என்பதில் சந்தேகமில்லை.

Technology

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: