Advertisment

தொலைந்து போன ஆதார் அட்டையை 5 நாட்களில் திரும்ப பெற என்ன செய்யவது?

ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்களுக்காக புதிய ஆப்’ஐ வெளியிட்ட UIDAI

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
New Aadhaar app MAadhaar launched

Aadhaar KYC Update

New Aadhaar app MAadhaar launched :  யூனிக் ஐடெண்டிஃபிகேஷன் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா (UIDAI) தற்போது ஐபோன்கள் மற்றும் ஆண்ட்ராய்ட் போன்களுக்காக புதிய ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. எம்ஆதார் என்று அழைக்கப்படும் இந்த ஆப்பின் பயன்பாடு குறித்து அறிந்து கொள்வோம்.

Advertisment

Setting up the mAadhaar app

இந்த ஆப்பை பயன்படுத்துவதற்கு நீங்கள் முதலில் இந்த ஆப்பை டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும். உங்களின் போன் நம்பர் கொடுத்து லாக் - இன் செய்து கொள்ள வேண்டும். உங்களின் ஆதார் எண்ணை அதில் அளித்து வெரிஃபை செய்து கொள்ள வேண்டும். அதற்கு ”ரெஜிஸ்டர் யுவர் ஆதார்” என்ற பேனரை க்ளிக் செய்யுங்கள். பிறகு ஓ.டி.பி. உங்களின் போனுக்கு அனுப்பப்படும். அதனை இன்புட்டாக அளித்து உங்கள் ஆதார் கார்டை உங்களின் ஸ்மார்ட்போனில் இணைத்துக் கொள்ளுங்கள்.

Requesting a new print

உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஆதார் அடையாள அட்டையை நீங்கள் தொலைத்து இருந்தால் நீங்கள் எளிமையாக புதிய அட்டையை வாங்கிக் கொள்லலாம். இந்த ஆப்பின் முதல் பக்கத்தில் ஆர்டர் ஆதார் ரீ ப்ரிண்ட் என்ற ஆப்சனை க்ளிக் செய்யுங்கள். அந்த பக்கத்திற்குள் நீங்கள் சென்ற பின்பு உங்கள் போன் நம்பர் ரெஜிஸ்டர் செய்யப்பட்டுள்ளதா என்று கேட்கும். ஆம் என்றால் அங்கு உங்களின் போன் நம்பரை பதிவு செய்ய வேண்டும். பிறகு உங்களின் ஆதார் அட்டை தொடர்பான தகவல்களை உள்ளீடாக தர வேண்டும். புதிதாக ஆதார் அடையாள அட்டையை பெற நீங்கள் ரூ. 50 கட்டணமாக செலுத்த வேண்டும் (ஜி.எஸ்.டி. அதில் அடக்கம்). ஐந்து நாட்களில் நீங்கள் உங்கள் ஆதார் அட்டையை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் படிக்க : பணம் அனுப்ப எளிமையான வழியை அறிமுகம் செய்யும் எஸ்.பி.ஐ…

Sharing Aadhaar details anonymously

பலருக்கும் தங்களுடைய ஆதார் அடையாள அட்டை தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பமாட்டார்கள். ஆனால் பல்வேறு இடங்களில் ஆதார் அடையாள அட்டையை வழங்கியாக வேண்டிய நிலை ஏற்படும். பயனாளர்களின் கருத்தை மனதில் கொண்டு ஆதார் அடையாள அட்டை தகவல்களை க்யூ. ஆர் கோடுகள் மூலமாகவும், விர்ச்சுவல் ஐ.டி. மூலமாகவும் அனுப்பிக் கொள்ள இயல்லும். இதற்கு நீங்கள் ஆப்பின் கீழே இருக்கும் My Aadhaar option என்ற ஆப்சனை க்ளிக் செய்யுங்கள். அதனை தொடர்ந்து உங்களிடம் அபாஸ்வேர்ட் கேக்கும். பின்னர் ஆதார் தகவல்கள் இருக்கும் பக்கம் ஓப்பன் ஆகும். அங்கு நீங்கள் ஷோ க்யூ.ஆர். கோட் மற்றும் ஜெனரேட் வி.ஐ.டி என்ற ஆப்சன்கள் இருக்கும். அதனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

To read this article in English

Lock/Unlock bio-metrics

உங்களின் ப்ரைவசி குறித்து அதிக கவலை கொள்பவர்களாக நீங்கள் இருக்கின்ற பட்சத்தில் இது உங்களுக்கு பெரிதும் உதவும். நீங்கள் தற்காலிகமாக உங்களின் பயோமெட்ரிக் தரவுகளை லாக் செய்தும் அன்லாக் செய்தும் கொள்ளலாம். இதன் மூலம் மற்றவர்கள் உங்கள் பயோமெட்ரிக் டேட்டாவை வைத்து உங்கள் ஆதார் தரவுகளை திருடுவதை தவிர்க்க இயலும்.

Aadhaar Card Aadhaar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment