/tamil-ie/media/media_files/uploads/2019/01/cats-21.jpg)
New Brain Training App
New Brain Training App : மூளையின் செயல்பாட்டுத் திறனை அதிகரிக்க புதிய செயலியை கண்டறிந்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் விளைவாக, மூளையின் கவனத்தை அதிகப்படுத்தவும், சுறுசுறுப்பாக்கவும் இந்த செயலியை கண்டறிந்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.
New Brain Training App
டிகோடர் என்று அழைக்கப்படும் இந்த செயலி தற்போது ஐபேடில் விளையாட இயலும். ஒரு மாதத்தில் 8 மணிநேரம் மட்டும் விளையாடினால் போதும். உங்களின் மூளையின் செயல்பாடு அதிகரித்து, கவனிப்புத் திறன் கூடும்.
பிஹேவரியல் மற்றும் க்ளினிகல் நியூரோ சயின்ஸ் துறையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு பற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறும் போது “இந்த விளையாட்டானது மூளையின் ஃப்ரெண்டல் - பார்சியல் நெட்வொர்க் செயல்பாட்டினை அதிகம் தூண்டுகிறது” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த ஆராய்ச்சிக்காக 75 நபர்களை பயன்படுத்தியுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். முதல் 25 நபர்களுக்கு டிகோடர் கேமை விளையாடக் கொடுத்துள்ளனர். இரண்டாம் 25 நபர்களுக்கு பிங்கோ விளையாட்டினை விளையாடக் கொடுத்தனர்.
மூன்றாம் குழுவினருக்கு விளையாட்டு எதையும் தரவில்லை. இந்த ஆராய்ச்சியானது 4 வாரங்களுக்கு நடைபெற்றது. பிங்கோ மற்றும் எதுவுமோ விளையாடாத நபர்களைவிட டிகோடர் விளையாடியவர்களின் மூளை மிகவும் சிறப்பாக செயல்பட்டது.
ஸ்டிமிலண்ட்ஸ் மற்றும் நிக்கோட்டின் போன்ற ஊக்கிகள் பயன்படுத்துபவர்களின் மூளையை விட டிகோடர் விளையாடுபவர்களின் மூளை சிறப்பாக செயல்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவினை அறிவித்துள்ளனர்.
ஆப்பிள் ஸ்டோரில் ஏற்கனவே இந்த விளையாட்டு வெளியிடப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் பயனாளிகளுக்கு இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்த விளையாட்டு அறிமுகப்படுத்தப்படும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.