/indian-express-tamil/media/media_files/LJZwOJ42ZcWXZNYXDco0.jpg)
இனி மக்கள் வீடு கட்ட ஆன்லைன் மூலம் எளிதாக முன் அனுமதி பெறலாம். ஆன்லைன் மூலம் கட்டட அனுமதி பெறும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூலை 22) தொடங்கி வைத்தார். இதன் மூலம் 3500 சரடி அடி கட்டடம் கட்டுவதற்கு ஆன்லைனில் மூலம் விண்ணப்பித்து அனுமதி பெற்று உடனடியாக வீடு கட்டலாம்.
இந்தப் புதிய திட்டம் குறித்துப் பேசிய அமைச்சர் முத்துசாமி, ஆன்லைன் மூலம் கட்டட அனுமதி பெறும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். முதல்வருடன் ஆய்வு கூட்டம் செல்லும் போதெல்லாம் வீட்டு வசதி துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வருவது குறித்து விவாதிப்போம். முதல்வரின் ஆலோசனை படி இந்த திட்டம் கொண்டுவரப்படுகிறது.
அதன் படி 2500சரடி அடி நிலப்பரப்பில் 3500 சரடி அடி கட்டடம் கட்டுவதற்கு அனுமதிக்காக ஒவ்வொறு அலுவலகத்திற்கும் வர வேண்டிய அவசியமில்லை என்று மாற்றியுள்ளோம். சுயசார்பு முறையில் விண்ணப்பித்து வீடுகளை கட்டிக் கொள்ளலாம். விதிமுறைகளுக்கு உள்பட்டு கட்ட வேண்டும். ஆன்லைன் மூலம் எளிய முறையில் அனுமதி பெறலாம்.
வீடு கட்ட வேண்டும் என நினைக்கும் அனைவருக்கும் இத்திட்டம் பயன்படும். 3 ஆண்டுகளில் கொண்டு வரப்பட்டதில் மிகப்பெரிய திட்டமாக இது இருக்கும். ஆன்லைன் மூலம் கட்டட அனுமதி பெறும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
நடுத்தர மக்களின் வீடு கட்டும் கனவை எளிதாக்க, தமிழ்நாட்டில் முதல்முறையாக கட்டட அனுமதியை ஆன்லைன் மூலம் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. வீடு கட்ட நினைக்கும் அனைவருக்கும் இந்த திட்டம் பயன்பெறும். இதற்கு முன் வீடு கட்டுவதற்கு முன்பாக பல்வேறு அலுவலகங்கள் சென்று அனுமதி வாங்க வேண்டும் என்ற நிலை இருந்தது. இது இப்போது மாற்றப்பட்டுள்ளது. அரசின் இணையதளம் சென்று அதில் கேட்டக்கப்படும் விவரங்களை கொடுத்து எளிதாக அனுமதி பெறலாம் என்று கூறினார்.
ஆன்லைனில் எப்படி விண்ணப்பிப்பது?
இத்திட்டத்தின் படி http://onlineppa.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பதாரர் அளிக்கும் விவரத்தின் அடிப்படையில் உடனடியாக அனுமதி வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட எந்த அலுவலகத்துக்கும் செல்ல வேண்டியதில்லை.
கட்டடப்பணிகள் முடிந்ததும், முடிவுச்சான்று பெறுவதில் இருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறது.
பரிசீலனைக் கட்டணம், கட்டமைப்பு, வசதிக் கட்டணங்களில் இருந்து 100% விலக்கு.
2,500 சதுரடி வரையிலான மனையில், 3500 சதுரடியில் கட்டப்படும் வீடுகளுக்கும் இத்திட்டம் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.