New Mobile Phone Tamil News, New Mobile Launch 2020 November: பல்வேறு இ-காமர்ஸ் வலைத்தளங்களின் பண்டிகை கால விற்பனைக்கு மத்தியில், ஸ்மார்ட்போன்கள் அதிகபட்ச விற்பனையைக் கொண்டுள்ளதால், அனைத்து தரப்பு மக்களும் தங்களுக்குப் பிடித்த பிராண்டுகளிலிருந்து புதிய ஸ்மார்ட்போனின் வருகையை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். கடந்த சில மாதங்களில், பிரபலமான பிராண்டுகளிலிருந்து பல ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து நவம்பர் மாதத்தில் வரவிருக்கும் சாதனங்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.
விவோ வி20 ப்ரோ
6.44 இன்ச் அமோலேட் டிஸ்ப்ளேவுடன் விவோ வி20 ப்ரோ வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஸ்னாப்டிராகன் 765 ஜி சிப்செட் மற்றும் 8 ஜிபி RAM மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மூலம் இயக்கப்படும். மேலும், இந்த சாதனம் 64MP முதன்மை கேமராவுடன் இரட்டை கேமரா அமைப்போடு டிரிபிள் கேமரா அம்சத்தைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 4,000 mAh பேட்டரி மூலம் வேகமாக சார்ஜ் செய்யும் ஆதரவுடன் வரும் என்றும் கூறப்படுகிறது.
ரெட்மி நோட் 10 ப்ரோ
ஷியோமியிலிருந்து எதிர்பார்க்கப்படும் இந்த ரெட்மி சாதனம், 6 ஜிபி RAM மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 765 ஜி சிப்செட் மூலம் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக, இது பஞ்ச்-ஹோல் வடிவத்தில் 6.7-இன்ச் IPS LSD டிஸ்ப்ளே மற்றும் 64 MP முதன்மை கேமராவுடன் குவாட் கேமரா அமைப்பையும் கொண்டிருக்கக்கூடும். இது தவிர, USB டைப்-சி ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,100 mAh பேட்டரியை ஆதரிக்கும்.
ரியல்மீ சி 17
ரியல்மீ சமீபத்தில் இந்தியாவில் ரியல்மீ சி 3, ரியல்மீ சி 11, ரியல்மீ சி 12 மற்றும் ரியல்மீ சி 15 ஆகிய மாடல்களை அறிமுகப்படுத்தியது. இப்போது இன்னும் சில மாதங்களில் ரியல்மீ சி 17 மாடலை கொண்டு வரத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு விகிதத்துடன் 6.5 இன்ச் HD + எல்சிடி பேனல், ஸ்னாப்டிராகன் 460 சிப்செட், 6 ஜிபி RAM, 128 ஜிபி ஸ்டோரேஜ், பின்புறத்தில் குவாட் கேமராக்கள், 8 MP முன் கேமரா, 5,000mAh பேட்டரி மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆகியவற்றை இந்த ஃபோன் கொண்டுள்ளது.
மைக்ரோமேக்ஸ் IN சீரிஸ்
மைக்ரோமேக்ஸ் இந்தியாவில் புதிய IN சீரிஸை விரைவில் அறிமுகப்படுத்தும். இந்த சீரிஸின் கீழ் மைக்ரோமேக்ஸ் IN 1 மற்றும் IN 1a ஆகிய மாடல்கள் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிக்கையின்படி, மைக்ரோமேக்ஸ் IN தொடர் மீடியா டெக் ஹீலியோ ஜி சீரிஸால் இயக்கப்படும். மைக்ரோமேக்ஸ் IN 1, ஹீலியோ ஜி 85 ஆல் இயக்கப்படுகிறது என்று கூறப்பட்டாலும், IN 1a ஹீலியோ ஜி 35 சிப்செட்டுடன் வரும் என்று கூறப்படுகிறது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் ரூ.15,000 விலைக்கு கீழ் வரும். மைக்ரோமேக்ஸ் IN 1a, 3 ஜிபி RAM, 32 ஜிபி ஸ்டோரேஜ், 6.5 இன்ச் HD + டிஸ்ப்ளே, 5,000 mAh பேட்டரி மற்றும் 13 எம்பி + 2 எம்பி கேமரா தொகுதி ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று அறிக்கையில் தெரிவிக்கின்றன. முன்பக்கத்தில், 8MP செல்ஃபி கேமரா இருக்கும்.
விவோ வி 20 SE
விவோ வி20 ப்ரோவோடு விவோ வி 20 SE மாடலையும் கொண்டு வரப்போவதாக நிறுவனம் கூறுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 48 MP ப்ரைமரி சென்சார், 32 MP முன் கேமரா, ஸ்னாப்டிராகன் 665, 8 ஜிபி RAM, 128 ஜிபி ஸ்டோரேஜ், 4100 mAh பேட்டரி, 33 டபிள்யூ ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் மற்றும் 6.44 இன்ச் அமோலேட் பேனலுடன் கூடிய டிரிபிள் ரியர் கேமரா உள்ளிட்ட அம்சங்களோடு களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"