New Mobile Phones With Price Mobile Phone Under 10000: கோவிட் -19 தொற்றுநோயினால் கடைப்பிடிக்கப்படும் லாக்டவுன், பல வீடுகளில் ஸ்மார்ட்போனை கட்டாயமாக்கியுள்ளது. தற்போதைய நிலைமைகளுடன் ஒப்பிடும்போது, கடந்த சில ஆண்டுகளில் ரூ.10,000 விலையிலான ஸ்மார்ட்போன்களின் பிரிவில் ஏராளமான சாதனங்கள் களமிறங்கின. ரூ.10,000-க்கும் குறைவான விலையில் ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால், ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசானில் நடைபெற்று வரும் தீபாவளி விற்பனையின் லிஸ்ட் இதோ
மோட்டோ ஜி9
மோட்டோரோலா ஜி9 ஸ்மார்ட்போன், 6.5 இன்ச் HD + IPS TFT எல்சிடி மேக்ஸ் விஷன் டிஸ்ப்ளேவுடன் 1600 × 720 பிக்சல் ரெசல்யூஷன் மற்றும் வாட்டர் டிராப் ஸ்டைல் நாட்ச் கொண்டுள்ளது. இதில், கிராஃபிக் அமைப்புகளுடன் கேமிங்கிற்கு போதுமானதாக இருக்கும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 ப்ராசசர் உள்ளது. ஃபாரஸ்ட் கிரீன் மற்றும் சஃபையர் ப்ளூ ஆகிய நிறங்களில் மார்க்கெட்டில் கிடைக்கும்.
மைக்ரோ எஸ்.டி கார்டு வழியாக 512 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 4 ஜிபி RAM மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனில் உள்ளது. பின்புறத்தில், முதன்மை 48 MP கேமரா, 2 MP டெப்த் சென்சார் மற்றும் 2 MP மேக்ரோ கேமரா ஆகியவற்றைக் கொண்ட ட்ரிபிள் கேமரா இதில் இருக்கிறது. முன்பக்கத்தில், 8MP ஸ்னாப்பர் உள்ளது. இவை அனைத்தும் 5,000 mAh பேட்டரியால் ஆதரிக்கப்படுகின்றன. மேலும், அண்ட்ராய்டு 10-உடன் 20W டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது. இது தற்போது ஃப்ளிப்கார்ட்டில் ரூ.9,999 விலைக்கு கிடைக்கிறது.
ரியல்மீ சி15
ஆகஸ்ட் 2020-ல் மற்ற சி சீரிஸ் தொலைபேசிகளுடன் ரியல்மீ சி 15 ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டது. இது மீடியா டெக் ஹீலியோ ஜி 35 செயலி மூலம் இயக்கப்படுகிறது. இது, சாதாரண கேமிங்கிற்கு ஏற்ற மொபைல். 1600 × 720 பிக்சல் தெளிவுத்திறனுடன் 6.52 இன்ச் HD + டிஸ்பிளே கொண்டுள்ளது. பின்புறத்தில், 13 MP கேமரா, 8 MP அல்ட்ராவைடு, 2 MP மோனோ மற்றும் 2 MP ரெட்ரோ கேமராவுடன் குவாட் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. 8MP முன் சென்சாரும் இதில் இருக்கிறது.
இந்த தொலைபேசியின் சிறப்பம்சம் அதன் மிகப்பெரிய 6,000 mAh பேட்டரி. இது, 18W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன், 3 ஜிபி + 32 ஜிபி மற்றும் 4 ஜிபி + 64 ஜிபி ஆகிய இரண்டு வேரியன்ட்டுகளில் வருகின்றன. அவை தற்போது முறையே ரூ.8,999 மற்றும் ரூ.9,999 விலைக்கு ஃப்ளிப்கார்ட்டில் கிடைக்கின்றன. சேமிப்பு மைக்ரோ எஸ்.டி கார்டு வழியாக 256 ஜிபி வரை விரிவாக்கக்கூடியது.
ஒப்போ A5s
ஒப்போ A5s, மீடியாடெக் MT6765 ப்ராசசரைக் கொண்டுள்ளது. தொலைபேசி ஸ்ட்ரீமிங், வீடியோ அழைப்பு மற்றும் பிற அடிப்படை அன்றாட பயன்பாடுகளுக்கு இந்த ஸ்மார்ட்போன் ஏற்றது. 1520 × 720 பிக்சல்களுடன் 6.2 HD + டிஸ்ப்ளே கொண்டுள்ளது. பின்புறத்தில், 13MP முதன்மை கேமரா மற்றும் 2MP டெப்த் சென்சார் கொண்ட டபுள் கேமரா அமைப்பு இருக்கிறது. முன்பக்கத்தில், 8MP செல்ஃபி கேமராவும் உள்ளது. இந்தத் தொலைபேசி பழை ஆண்ட்ராய்டு ஓரியோவின் ColorOS-உடன் இயங்குகிறது. இருப்பினும், சமீபத்திய பதிப்பிற்கு புதுப்பித்துக்கொள்ளலாம். இதன் 3 ஜிபி + 32 ஜிபி வேரியன்ட், அமேசானில் ரூ.8,999 விலைக்குக் கிடைக்கிறது மற்றும் 4 ஜிபி + 64 ஜிபி வேரியன்ட், ஃப்ளிப்கார்ட்டில் கிடைக்கிறது. சேமிப்பு மைக்ரோ எஸ்.டி கார்டு வழியாக 256 ஜிபி வரை விரிவாக்கிக்கொள்ளலாம்.
https://open.spotify.com/show/3qdrz0Kb0wRugR0FLgDg5t
சாம்சங் M01s
பட்ஜெட் பிரிவில் இந்த தென்கொரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரிடமிருந்து ரூ.10,000-க்கு கீழ் உள்ள சில தொலைபேசிகளில் சாம்சங் எம் 01s மொபைலும் ஒன்று. இதில் 720 × 1520 பிக்சல் தெளிவுத்திறனுடன் 6.2 அங்குல HD + டிஸ்ப்ளே உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் தற்போது அமேசானில் ரூ.9,499 விலையில் கிடைக்கிறது. மீடியாடெக் MT6762 ப்ராசசர் மற்றும் 3 ஜிபி RAM மற்றும் 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மூலம் இந்த மொபைல் இயக்கப்படுகிறது. மேலும், 512 ஜிபி வரை விரிவாக்கிக்கொள்ளலாம். அதுமட்டுமின்றி, 4,000 mAh பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது. ஆனால் வேகமான சார்ஜிங் இயல்பு இல்லை. இது டால்பி ஆடியோவிற்கான ஆதரவையும் கொண்டுள்ளது.
ரெட்மி 9 ப்ரைம்
ரெட்மி 9 ப்ரைம், 6.53 இன்ச் FHD + டிஸ்பிளே கொண்டிருக்கிறது. மீடியாடெக் ஹீலியோ ஜி 80 ப்ராசசர் மற்றும் 4 ஜிபி RAM மற்றும் 128 ஜிபி உள் சேமிப்புடன் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது. இந்த தொலைபேசி சாதாரண கேமிங்கிற்கு சிறந்தது மற்றும் செயலிகளுக்கு இடையில் எளிதாக மாற்றுவதைக் கையாளுகிறது. பின்புறத்தில், 13MP AI முதன்மை கேமரா, 8MP இரண்டாம் நிலை அல்ட்ராவைடு கேமரா, 2MP டெப்த் சென்சார் மற்றும் 5MP உருவப்படம் கேமரா ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. செல்ஃபிக்களுக்கு, ரெட்மி 9 ப்ரைம் 8MP AI முன் கேமரா உள்ளது. இவை அனைத்தும் மிகப்பெரிய 5020 mAh பேட்டரியால் ஆதரிக்கப்படுகின்றன மற்றும் 18W வேகமான சார்ஜிங்கையும் ஆதரிக்கின்றன. ரெட்மி 9 ப்ரைம் இரண்டு வேரியன்ட்டுகளில் வருகின்றன. அமேசானில், 4 ஜிபி RAM + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட்டின் விலை ரூ.9,999 மற்றும் 4 ஜிபி RAM + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட்டின் விலை ரூ.10,999.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.