Advertisment

ஆன்லைன் வங்கி கணக்கில் திருட்டு: OTP இல்லாமல் மோசடி

மக்கள் ஆன்லைன் வங்கி கணக்கில் பயனாளர் விவரத்தை அவ்வப்போது சரிபார்க்கவும்.

author-image
WebDesk
Jan 12, 2023 23:02 IST
ஆன்லைன் வங்கி கணக்கில் திருட்டு: OTP இல்லாமல் மோசடி

OTP இல்லாமலே வங்கி கணக்கில் இருந்து சைபர் கிரைம் மோசடியாளர்கள் லட்சக்கணக்கில் பணத்தை திருடிய சம்பவம் வாடிக்கையாளர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisment

ஆன்லைன் திருட்டில் நிமிடத்திற்கு ஒரு யுக்தி என ஸ்மார்ட்டாக காட்டுகின்றனர் மோசடி கும்பல்கள். இதில் நாம் பாதுகாப்பானது என்று எதை நம்புகிறோமோ, அதெல்லாம் உடைக்கப்படும்போது தான் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

அந்த வகையில் ஆன்லைன் பண பரிவர்த்தனையில் பாதுகாப்பாக பார்க்கப்படும் OTP என்ற One Time Password இல்லாமலேயே ஆன்லைனில் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்படும் சம்பவம்,குஜராத்தில் அரங்கேறி இருக்கிறது.

வதுகாராவில் இது தொடர்பான புகார்களும் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவங்களில் பயனாளர்களுக்கு தெரியாமலேயே அவர்களது வங்கிக் கணக்கில் Add Beneficiary- யில் மோசடியாளர்கள் தங்கள் கணக்கை இணைகிறார்கள்.

பயனாளர்கள் உழைத்து சேமித்த பணத்தை சத்தமில்லாமல் தங்கள் கணக்கிற்கு மாற்றிவிடுகிறார்கள். இதில் டுவிஸ்ட் என்னவென்றால் Add Beneficiary- யில் ஒருவரை புதிதாக இணைக்க வேண்டும் என்றாலும், பணத்தை பரிமாற்றம் செய்ய வேண்டும் என்றாலும் OTP அவசியமாகும்.

ஆனால், இப்போது பாதிக்கப்பட்டவர்கள் யாருக்கும் OTP வரவில்லை என்று புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக குஜராத் காவல்துறை வங்கிகளிடம் விசாரித்தனர். ஏதேனும் பாதுகாப்பு குளறுபடி இருந்ததா என்று விளக்கம் கேட்டுள்ளனர்.

இதுபோன்ற மோசடிகளில் இருந்து வங்கிக் கணக்குகளை காப்பாற்ற சில எச்சரிக்கை நடவடிக்கை அவசியமாகும்.

மக்கள் ஆன்லைன் வங்கி கணக்கில் பயனாளர் விவரத்தை அவ்வப்போது சரிபார்க்கவும். தெரியாத யாராவது பயனாளராக இருந்தால் உடனடியாக நீக்கவும்.

நீண்ட நாட்கள் பரிவர்த்தனை செய்யாத பயனாளர்களையும் நீக்கவும், பொது கணினிகளில் ஆன்லைன் வங்கி கணக்குகளை பயன்படுத்துவதை தவிர்க்கவும். பண பரிவர்த்தனைகளை பொது வைபை இணைப்பை பயன்படுத்தி உபயோகிப்பதை தவிர்க்கவும்.

பயனாளர்கள் பாஸ்வர்டுகளை 14 நாட்களுக்கு ஒருமுறை மாற்றுவதை வழக்கமாக வைத்துக்கொள்ளவும். இவ்வாறு இருக்கும்பட்சத்தில் இது போன்ற மோசடிகளில் இருந்து தப்பிக்க வாய்ப்புள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Bank News #Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment