Smartwatch to detect corona symptoms: கடந்த சில மாதங்களில், கோவிட்-19-ஐ மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்ட பல கேஜெட்களை நாம் கண்டிருக்கிறோம். இந்த பேண்டமிக் காலகட்டத்தில், ரத்த ஆக்ஸிஜன் அளவு, ரத்த அழுத்தம் மற்றும் உடல் வெப்பநிலையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் பல்வேறு தயாரிப்புகளின் தேவை அதிகரித்துள்ளது.
சமீபத்தில் ஷியோமி, Mi பேண்ட் 5-ஐ அறிமுகப்படுத்தியது. இதில் அழுத்தங்களைக் கண்காணித்தல், யோகா பயன்முறை, சில வீட்டு உடற்பயிற்சி முறைகள் உள்ளிட்ட கோவிட்-19 அறிகுறிகளைக் கண்காணிக்கும் அம்சங்களும் பொருத்தப்பட்டன. இந்த பட்டியலில் தற்போது விளையாட்டு மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிராண்டான ஹேமர் (Hammer) இணைந்துள்ளது. இந்நிறுவனம், பல வகையான ஆடியோ ஸ்பீக்கர்கள் மற்றும் உடற்பயிற்சி பேண்ட்களை வழங்கி வருகிறது. அதில், ரூ. 2,799 விலையில் புதிய ஹேமர் பல்ஸ் ஸ்மார்ட்வாட்ச் ஏராளமான சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கிறது.
தற்போதைய காலகட்டத்திற்குத் தேவையான அனைத்து நோக்கங்களையும் இந்த ஹேமர் ஸ்மார்ட்வாட்ச் பூர்த்தி செய்கிறது. இந்த வாட்ச்சில் உடல் வெப்பநிலை கண்காணிப்பு சென்சார் பொருத்தப்பட்டிருக்கிறது. மேலும், நாள் முழுவதுமான இதயம் மற்றும் ரத்த அழுத்த விகிதத்தை தெரிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
பிற ஸ்மார்ட்வாட்ச்களைப் போலவே, அழைப்புகள், குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் உள்ளிட்ட புதிய அறிவிப்புகளை இந்த வாட்சிலும் தெரிந்துகொள்ளலாம். உள்ளமைக்கப்பட்ட wrist trainer உதவியுடன், புதிய அறிவிப்பு வரும்போது கடிகாரம் 'வைப்ரேட்' ஆகும். கூடுதலாக, தூக்கப் பழக்கத்தைக் கண்காணிக்கும் sleep tracking அம்சமும் இதில் உள்ளது.
புளூடூத் v5.0 மற்றும் IP67 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (water and dust resistant) ஆகியவற்றுடன் தினசரி 'step' ட்ராக்கிங், கலோரி கவுன்ட்டர் மற்றும் டிஸ்டன்ஸ் கண்காணிப்பு போன்ற அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்வாட்ச் வருகிறது. இது தவிர, Mi பேண்ட் 5 போலவே ஸ்மார்ட்போனுடன் இணைத்து புகைப்படங்களை கிளிக் செய்யும் போது, தொலைபேசி கேமராவை சீராக கட்டுப்படுத்துகிறது.
இந்த ஸ்மார்ட்வாட்ச் அனைத்து ஆண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்களுடனும் இணைத்து உபயோகிக்கலாம் மற்றும் இதன் பேட்டரி ஏழு நாட்கள் வரை நீடிக்கும் என்று நிறுவனம் கூறுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"