அதிர்ச்சி தகவல்: நீங்கள் வாட்ஸ் அப்பில் இருப்பதை உளவு பார்க்கும் செயலி!

இந்த செயலி ஒருவர் ஆன்லைனில் இருக்கும் நேரம், அவர்கல் பகிரும் புகைப்படங்கள், வீடியோக்கல், செய்திகள், ஆடியோக்களை உளவு பார்க்குமாம்.

இன்றைய தொழில் நுட்ப உலகில், தவிர்க்க முடியாத ஒரு செயலியாக மாறியிருக்க கூடிய வாட்ஸ் அப் உரையாடல்களை ஒரு செயலி உளவு பார்ப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸப் செயலி,  இன்றைய காலக்கட்டத்தில் பல்வேறு தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்ப பயன்படுத்தப்படுகிறது.   சமீபத்தில் லைஃப்ஹேக்கர்  வெளிட்ட செய்தி ஒன்று அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அதில்,  சாட்வாட்ச் என அழைக்கப்படும் செயலி ஒன்று மிகப்பெரிய உளவு பார்க்கும் செயலியாக  உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அது வாட்ஸ் அப் யூசர்களை உளவு பார்க்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. வாட்ஸ்அப் உரையாடல்களை பாதுகாப்பானதாக மாற்ற அந்நிறுவனம்,  பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில்,   இந்த தகவல் பொதுமக்கள் மற்றும்   வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த செயலி ஒருவர் ஆன்லைனில் இருக்கும் நேரம், அவர்கள் பகிரும் புகைப்படங்கள், வீடியோக்கல், செய்திகள், ஆடியோக்களை உளவு பார்க்குமாம். அதே போல்,  வாட்ஸ்அப் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டேட்டஸ் அம்சத்தை பயன்படுத்தி மற்றவர்கள் எப்போது வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர் என்றும் இரு கான்டாக்ட்கள் சாட் செய்யும் தகவல்களை இது அறிந்துக் கொள்ளுமாம்.

முதலில், இந்த செயலி ரூ.140 கட்டணத்தில் ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் இயங்குதளங்களில் கிடைத்து வந்தது.  தற்போது,  ஐஓஎஸ் இயங்குதளத்தில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்டுள்ளது.  கூடிய விரைவில்,இந்த செயலியின் வெப் வெர்ஷன் உருவாக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் வெளியிடப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

×Close
×Close