New Whatsapp feature will let you quickly delete accidentally posted status updates Tamil News : வாட்ஸ்அப் தளத்திற்கான புதிய அம்சத்தை உருவாக்கி வருவதாகக் கூறப்படுகிறது. இது ஏராளமான ஸ்டேட்டஸ் புதுப்பிப்புகளைப் பதிவேற்றுபவர்களுக்கு ஒரு நல்ல செய்தியாக இருக்கும். இந்த அம்சம் பயனர்கள் தற்செயலாக அல்லது தவறான நேரத்தில் இடுகையிட்ட ஸ்டோரியை விரைவாக செயல் தவிர்க்க அனுமதிக்கும்.
WABetaInfo-ன் புதிய அறிக்கையின்படி, வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் அப்டேட்களுக்கு அடுத்துள்ள செயல்தவிர் பட்டனை சோதிப்பதாகக் கூறுகிறது. இந்த பட்டனை கிளிக் செய்வதன் மூலம், போஸ்ட் செய்யப்பட்ட ஸ்டேட்டஸ் புதுப்பிப்பைப் பயனர்கள் விரைவாக அகற்ற அனுமதிக்கும். தற்போது, போஸ்ட் செய்யப்பட்ட ஸ்டேட்டஸை அகற்ற, பயனர்கள் முதலில் மூன்று-புள்ளி மெனுவை க்ளிக் செய்து, பின் வரும் விருப்பங்களில் நீக்கு என்பதை அழுத்த வேண்டும்.
தேவையற்ற ஸ்டோரியிலிருந்து விடுபட இது ஏற்கனவே ஒரு விரைவான வழி. புதிய 'செயல்தவிர் பட்டன்' முறை விரைவாக இருக்கும். செயல்தவிர் பட்டனை உடனடியாக அணுகினால், நீங்கள் தற்செயலாக இடுகையிட்ட கதையின் ஸ்கிரீன் ஷாட்டை யாராவது எடுக்க, அந்த இரண்டு வினாடிகளை நீங்கள் சேமித்து வைத்திருக்கலாம்.
இந்த அம்சம் எப்படி இருக்கிறது என்பதற்கான முன்னோட்டம் இங்கே.
தற்போது பீட்டாவில் உள்ள இந்த அம்சம், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட சில iOS சோதனையாளர்களுக்கு வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. IOS-ல் அதிகமான வாட்ஸ் அப் பீட்டா பயனர்கள், வரும் நாட்களில் இந்த அம்சத்தைப் பெற வேண்டும் என்று அறிக்கை பரிந்துரைக்கிறது.
ஆண்ட்ராய்டில் இந்த அம்சம் கிடைப்பது குறித்து தற்போது எந்த அப்டேட்டும் இல்லை. ஆனால், இது விரைவில் ஆண்ட்ராய்டில் உள்ள வாட்ஸ்அப் பீட்டா பயனர்களுக்கும் வரக்கூடும் என்று நாங்கள் நினைக்கிறோம்.
செயல்தவிர் பட்டனை சேர்க்கும் திறன் என்பது உடனடி செய்தியிடல் தளத்திற்கு வாட்ஸ் அப் கொண்டு வரும் சமீபத்திய அம்சம். இந்தப் பயன்பாடு சமீபத்தில் பல சாதன ஆதரவு மற்றும் தற்போதைய குழு அழைப்புகளில் சேரும் திறன் போன்ற அம்சங்களைச் சேர்த்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil