/indian-express-tamil/media/media_files/2025/10/27/ps6-2025-10-27-13-58-07.jpg)
சோனியின் பி.எஸ்-6 ரேட் தெரியுமா? தொழில்நுட்ப அம்சங்கள் என்னென்ன? எப்போது வெளியாகிறது? முழு விபரம்!
சோனி நிறுவனம் பிளேஸ்டேஷன் 5 கன்சோலை வெளியிட்டு 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இந்தக் கன்சோல் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை உலகளவில் 80.3 மில்லியன் யூனிட்டுகளுக்கும் மேல் விற்று சாதனை படைத்துள்ள நிலையில், இப்போது அனைவரின் கண்களும் பி.எஸ்-6 மீதே உள்ளன. சோனி இன்னும் அடுத்த தலைமுறை கன்சோலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், இதுகுறித்த வதந்திகள் பரவி வருகின்றன. அவற்றில் சமீபத்திய கசிவு என்னவென்றால், பி.எஸ்-6 மற்றும் அடுத்த எக்ஸ்பாக்ஸ் (Xbox) இடையே அதன் விலையில் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கும் என்பதே.
கசிந்துள்ள தகவல்களின்படி, சோனியின் பிளேஸ்டேஷன் 6 கன்சோலின் விலை சுமார் $600 (இந்திய மதிப்பில் ரூ.50,000 முதல் ரூ.52,000) ஆக இருக்கலாம். அதே சமயம், மைக்ரோசாஃப்டின் அடுத்த தலைமுறை எக்ஸ்பாக்ஸ் மேக்னஸ் (Magnus) விலை $1,200 (இந்திய மதிப்பில் ரூ.1,00,000 முதல் ரூ.1,04,000) வரை உயரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பிரபல டிப்ஸ்டரான KeplerL2, ஏ.எம்.டி (AMD) நிறுவனத்தின் இண்டர்னெல் ஹார்டுவேர் வரைபடங்களுடன் (Internal Hardware Roadmap) தொடர்புடைய ஆவணங்களில் இருந்து இந்தத் தகவல் கசிந்துள்ளது. இது, 2028-ம் ஆண்டு வெளிவர இருக்கும் இந்த கன்சோல்கள் குறித்த மிக விரிவான பார்வை அளிக்கிறது.
பி.எஸ்-6 கன்சோலானது எக்ஸ்பாக்ஸ் மேக்னஸை விட உற்பத்தி செய்வதற்கு மிக மலிவானதாக இருக்கும் என்று KeplerL2 கூறுகிறார். இதற்குக் காரணம் அவற்றின் உள் கட்டமைப்பிலுள்ள வேறுபாடுகள்தான். "அடுத்த தலைமுறை எக்ஸ்பாக்ஸில் 42% அதிக சிலிகான், 20% அதிக மெமரி மற்றும் அதிக போர்டு மற்றும் கூலிங் செலவுகள் உள்ளன" என்று குறிப்பிட்டுள்ளார்.
கசிந்த தகவல்களின்படி, பி.எஸ்-6 கன்சோலில் சுமார் 30 ஜிபி யூனிஃபைட் மெமரி இருக்கலாம். எக்ஸ்பாக்ஸ் மேக்னஸ் கன்சோலில் 36 ஜிபி ரேம் வரை இருக்கலாம். சோனியின் வரவிருக்கும் ஹேண்டில்ட் (Handheld) வகை கன்சோலில் 24 ஜிபி ரேம் எதிர்பார்க்கப்படுகிறது.
பி.எஸ்6-க்கான சிப்-ஐ சோனியும் ஏ.எம்.டி நிறுவனமும் இணைந்து புராஜெக்ட் அமெதிஸ்ட் (Project Amethyst) என்ற குறியீட்டுப் பெயரில் உருவாக்கி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த சிப்செட், ஏ.எம்.டி-யின் வரவிருக்கும் ஸென் 6 (Zen 6) CPU மற்றும் ஆர்.டி.என்.ஏ 5 (RDNA 5) GPU கட்டமைப்புகளை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என்றும், புதிய நரம்பியல் செயலாக்க திறன்களுடன் (Neural Processing Capabilities) ஒருங்கிணைக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்திறன், கன்சோலை ஏ.ஐ. அடிப்படையிலான அப்ச்கேலிங் (Upscaling), நிகழ்நேர ஒளிக் கட்டுப்பாடுகளுக்கு (Real-time lighting improvements) பயன்படுத்த அனுமதிக்கும். இதன் மூலம் செலவை அதிகப்படுத்தாமல், அடுத்த தலைமுறை செயல்திறனைப் பெற முடியும்.
பி.எஸ்-6 எப்போது வெளியாகும்?
பி.எஸ்-6 கன்சோலின் வெளியீட்டுத் தேதியை சோனி உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், மூர்'ஸ் லா இஸ் டெட் (Moore’s Law Is Dead) உள்ளிட்ட பல ஆதாரங்களின்படி, இதன் உற்பத்தி 2027-ம் ஆண்டு தொடங்கலாம் என்றும், அதன் வெளியீடு 2027 இறுதி அல்லது 2028-இல் இருக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us