மொபைல் போன்கள் மற்றும் அனைத்து மின்னணு சாதனங்களுக்கும் (ஒரே சார்ஜர்) பொதுவான சார்ஜர், டைப்-சி (USB-C) போர்ட் சார்ஜர் பயன்படுத்தும்படி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான விதிகளை ஐரோப்பிய ஒன்றியம் சமீபத்தில் கொண்டு வந்துள்ளது.
2024ஆம் ஆண்டுக்குள் மொபைல் போன், டேப்லெட், கேமராக்களில் டைப்-சி சார்ஜர் பயன்படுத்தும்
மாற்றியமைக்க விதிகளில் கூறப்பட்டுள்ளது.
நாம் நம் ஸ்மார்ட்போன்களுக்கு பல்வேறு வகையான சார்ஜர் பயன்படுத்துகிறோம். USB Type-C, Type-B பயன்படுத்துகிறோம். அதேபோல் ஐபோனுக்கு பிரத்யேக சார்ஜர் உள்ளது. இவ்வாறு பலவற்றை பயன்படுத்தி வருகிறோம். இது பல சமயங்களில் சிக்கலானதாக உள்ளது. புது போன் மாற்றும்போது, வெளியூர்களுக்கு செல்லும்போது எனப் பல வகைகளில் சிக்கலானதாக உள்ளது.
மின்னணு கழிவு (e-waste) தொடர்பான சிக்கல்களைத் தீர்க்கவும், பயனர்களுக்கு உதவியாக இருக்கவும் பொதுவான சார்ஜர் கொள்ளை கொண்டுவரப்படுவதாக கூறப்பட்டது. அந்தவகையில்
ஐரோப்பிய ஒன்றியம் அனைத்து நிறுவன ஸ்மார்ட்போன்கள், ஆப்பிள் போன்கள், அதன் சாதனங்கள் என அனைத்திலும் ஒரே சார்ஜர் டைப்-சி பயன்படுத்தும்படி விதிகள் கொண்டுவந்துள்ளது.
இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் இனிவரும் தனது சாதனங்களில் ஐபோன், மேக் லேப்டாப், டேப்லெட், AirPods ஆகியவற்றை டைப்-சி சார்ஜருக்கு மாற்றும் என தகவல் வெளியாகி உள்ளது. அடுத்தாண்டு ஐபோன் 15 டைப்-சி சார்ஜர் பயன்பாட்டுடன் வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“