இந்த மாதம் வானில் கிரகங்கள் அணிவகுப்பு நிகழ்வு நடைபெற உள்ளது. இதைப் பொது மக்கள் காணும் வகையில் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளன.
பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில், ஜனவரி 22 முதல் 25 வரை தினமும் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெறும். வானம் மேக மூட்டங்கள் இல்லாமல் தெளிவாக இருக்கும் போது இந்த கிரக அணிவகுப்பை காண முடியும். பொது மக்களுக்கு அதற்கேற்கு ஏற்ப நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அனுமதி இலவசம், மேலும் விவரங்களுக்கு 044-24410025 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.