இந்த ஆண்டு இறுதிக்குள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு இந்திய விண்வெளி வீரரை அமெரிக்கா அனுப்பும் என இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா மற்றும் இஸ்ரோ இணைந்து பூமியை கண்காணிக்கும் திட்டமான NISAR திட்டத்தில் , இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்கா, இந்திய விண்வெளி வீரரை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பும் என இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 248-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமெரிக்க தூதுவர் இவ்வாறு கூறினார்.
இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் ஆராய்ச்சி மற்றும் முக்கியமான வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
"இந்தியாவிடம் இன்றளவு இல்லாத சில திறன்கள் அமெரிக்காவிடம் உள்ளன. ஆனால் இவ்விரண்டும் இணைந்தால், இரு நாடுகளும் அந்தத் திறன்களைப் பெறும்" என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“