நெட் இல்லாதபோதும் மெசேஜ் அனுப்பலாம்... கவலையே வேண்டாம்; பிட்சாட் வந்தாச்சு!

பிட்சாட் செயலி மூலம் இணைய அணுகல் இல்லாத பகுதிகளிலும், இணைய சேவை துண்டிக்கப்பட்ட சூழ்நிலைகளிலும் தடையின்றித் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியும். இது தொலைதூரப் பகுதிகள், பேரிடர் காலங்கள் (அ) இணையக் கட்டுப்பாடுகள் நிலவும் சமயங்களில் பயனுள்ளதாக அமையும்.

பிட்சாட் செயலி மூலம் இணைய அணுகல் இல்லாத பகுதிகளிலும், இணைய சேவை துண்டிக்கப்பட்ட சூழ்நிலைகளிலும் தடையின்றித் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியும். இது தொலைதூரப் பகுதிகள், பேரிடர் காலங்கள் (அ) இணையக் கட்டுப்பாடுகள் நிலவும் சமயங்களில் பயனுள்ளதாக அமையும்.

author-image
WebDesk
New Update
Bitchat

நெட் இல்லாதபோதும் மெஜேஜ் அனுப்பலாம்... கவலையே வேண்டாம்; பிட்சாட் வந்தாச்சு!

சமூக வலைத்தளத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய எக்ஸ் (X) நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜாக் டோர்சி, தனது அடுத்த கண்டுபிடிப்பாக 'பிட்சாட்' (Bitchat) என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார். இது சாதாரண செய்திச் செயலி அல்ல. வாட்ஸ்அப் (WhatsApp), டெலிகிராம் (Telegram) போன்ற பிரபலமான செயலிகளுக்கு இணைய இணைப்பு என்பது கட்டாயம் என்ற நிலையில், பிட்சாட் அதிலிருந்து மாறுபட்டு, இணைய வசதி இல்லாமலேயே செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

Advertisment

பிட்சாட், செய்திகளை அனுப்பவும் பெறவும் ப்ளூடூத் (Bluetooth) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இதன்மூலம், பயனர்கள் இணைய அணுகல் இல்லாத பகுதிகளிலும் (அ) இணைய இணைப்பு துண்டிக்கப்பட்ட சூழ்நிலைகளிலும் தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள முடியும். இது புரட்சிகரமான அம்சமாகும். குறிப்பாக, பேரிடர் காலங்கள் அல்லது தொலைதூர கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக அமையும்.

டோர்சியின் மற்றொரு புதிய தளமான ப்ளூஸ்கை (Bluesky) போலவே, பிட்சாட்டும் decentralised தளமாகச் செயல்படுகிறது. அதாவது, இதற்கு எந்தவிதமான central servers கிடையாது. இது பயனர்களின் தரவு தனியுரிமையை உறுதிப்படுத்துவதோடு, அரசின் கண்காணிப்பு (அ) இணைய முடக்கம் போன்ற அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கிறது. ஒருவேளை central servers இருந்தால், அவை முடக்கப்பட்டால் சேவை பாதிக்கப்படும். ஆனால், பரவலாக்கப்பட்ட கட்டமைப்பில், ஒரு புள்ளி முடக்கப்பட்டாலும் மற்ற புள்ளிகள் வழியாகத் தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்படும்.

Advertisment
Advertisements

ஜாக் டோர்சி தனது X சமூக வலைத்தளப் பதிவில், பிட்சாட்டை "ப்ளூடூத் மெஷ் நெட்வொர்க்குகள், ரிலேக்கள் மற்றும் ஸ்டோர் அன்ட் ஃபார்வர்ட் மாடல்கள், செய்தி குறியாக்க மாதிரிகள் மற்றும் சில விஷயங்களில் எனது பரிசோதனை" என்று விவரித்துள்ளார். இது ஐஆர்சி (IRC - Internet Relay Chat) போன்ற பழைய அரட்டை தளங்களின் அனுபவத்தை நினைவூட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த புதிய செயலி, தகவல்தொடர்பு உலகில் புதிய அத்தியாயத்தைத் திறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இணையச் சார்பற்ற மற்றும் தனியுரிமையை மையமாகக் கொண்ட இந்த செயலி, எதிர்காலத்தில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதுகுறித்து ஜாக் டோர்சி கூறுகையில், பிட்சாட் செயலி தற்போது மறுபரிசீலனையில் உள்ளது என்றும், விரைவில் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் (Apple App Store) வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளார். ஆண்ட்ராய்டு (Android) பயனர்களை பொறுத்தவரை, பிட்சாட்டின் கிட்ஹப் (GitHub) செயலியின் "நெறிமுறை இயங்குதளம் சாரா வடிவமைப்பைக் கொண்டது" என்று குறிப்பிடுகிறது. அதாவது, ப்ளூடூத் எல்.இ ஏபிஐ-கள், பாக்கெட் அமைப்பு, குறியாக்க முறை மற்றும் இணக்கமான சேவை அல்லது பண்பு UUID-களைப் பயன்படுத்தி ஆண்ட்ராய்டுக்கான கிளையண்டை உருவாக்க முடியும் என்று அர்த்தம். எனவே, ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் பிட்சாட் செயலி விரைவில் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

Technology

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: