மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது தயாரிப்புகளில் ஒன்றான வேர்ட்பேட் (WordPad) செயலியை வழங்குவதை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. குறிப்பாக விண்டோஸ் 11 ஓ.எஸ் முதல் வேர்ட்பேட் செயலி வழங்கப்படாது எனக் கூறியுள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறுகையில், விண்டோஸ் 11 பீட்டா பில்ட் அப்டேட்டில் வேர்ட்பேட் மற்றும் People செயலிகள் வழங்கப்படாது. அந்த செயலிகளை இன்ஸ்டால் செய்ய முடியாது என்று கூறியது.
இதன் மூலம் நீங்கள் சமீபத்திய விண்டோஸ் 11 அப்டேட் செய்யாத வரை நீங்கள் விண்டோஸ் 11-ல்
WordPad பயன்படுத்த முடியும்.
வேர்ட்பேட் செயலி கடந்த 25 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. நோட்பேட், வேர்ட் செயலிகளைப் போல் இதிலும் பல்வேறு அம்சங்களைப் பயன்படுத்தலாம். அதோடு மைக்ரோசாப்ட் இனி வரும் நாட்களில் தனது கோபைலட் ஏ.ஐ அம்சங்களில் நிறைய செயலிகளை கொண்டு வரும் எனக் கூறியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“